தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரக்கோணத்தில் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டிக்கிடக்கும் பொதுக் கழிப்பறைகள்

18 Jul 2026, 11:44 pm
அரக்கோணத்தில் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டிக்கிடக்கும் பொதுக் கழிப்பறைகள்
<p><strong>அரக்கோணத்தில் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டிக்கிடக்கும் பொதுக் கழிப்பறைகள்</strong></p><p>ராணிப்பேட்டை, ஜூலை 18- ராணிப்பேட்டை மாவட்டத்தின் மிக முக்கிய நகர மாகவும், மாவட்டத்திலேயே அதிக மக்கள் நடமாட்டம் கொண்ட பகுதியாகவும் அரக்கோணம் திகழ்கிறது. இங்குள்ள முக்கிய ரயில் நிலை யம் வழி யாக நாள்தோறும் ஆயி ரக்கணக்கான பயணிகள் தங்களின் அன்றாட பணி களுக்காகவும், வெளியூர் பய ணங்களுக்காகவும் வந்து செல்கின்றனர். இத்தகைய முக்கியத்து வம் வாய்ந்த அரக்கோணம் நகராட்சிக்கு உட்பட்ட சுவால் பேட்டை, வீட்டு வசதி வாரிய குடி யிருப்பு பூங்கா, எல்.ஐ.சி எதிரில் மற்றும் பல்வேறு பகுதி களில், ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழும், நகராட்சி சார்பிலும் பொதுமக்களின் வசதிக்காகப் புதிய கழிப்பறைகள் கட்டப் பட்டன. ஆனால், இந்த கழிப்பறைகளின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முழுமை யாக முடிவடைந்த நிலையிலும், அவை இன்று வரை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளன. கூட்டுறவுத்துறை அமைச்சர் தொகுதி என்று அறியப்படும் இந்த அரக்கோணத்தில், மக்கள் அதிகம் கூடும் பகுதி களில் கூட கழிப்பறைகள் திறக்கப்படாததால், நகரின் பல இடங்களில் கடும் சுகாதாரக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. “வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள், அன்றாடப் பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள், முதியவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கழிப்பறைகள் இல்லாமல் தினந்தோறும் பெரும் அவ திக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பூட்டிக்கிடக்கும் பொதுக் கழிப்ப றைகளை நகராட்சி நிர்வாகம் உடனடியாகத் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.” என சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். இப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகமும், நகராட்சி அதி காரிகளும் உடனடியாகத் தலை யிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த அரக்கோணம் மக்க ளின் எதிர்பார்ப்பாக உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.