தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரக்கோணம் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு கல்வி அதிகாரி நோட்டீஸ்

12 Jun 2026, 10:34 pm
அரக்கோணம் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு கல்வி அதிகாரி நோட்டீஸ்

அரக்கோணம் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு கல்வி அதிகாரி நோட்டீஸ்

ராணிப்பேட்டை, ஜூன் 12- அரக்கோணம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் பாதுகாப்பு குறைபாடு மற்றும் பெற்றோரிடம் ஆசிரியர்கள் கனிவற்ற முறையில் நடந்து கொண்டது தொடர்பாக எழுந்த புகார்களை அடுத்து, பள்ளி தலைமை ஆசிரியருக்கு மாவட்டக் கல்வி அலுவலர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி யுள்ளார்.

இப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு சேர்க்கைக்கு வந்த மாணவியின் பெற்றோரைத் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கடிந்து பேசியதால், அவர்கள் முத லமைச்சர் தனிப்பிரிவில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தனர். அதன் அடிப் படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இப்பள்ளி யில் 8-ஆம் வகுப்பு படிக்கும் ஹேமலதா என்ற மாணவி, பள்ளி திறந்த நாளில் வகுப்பறையைச் சுத்தம் செய்தபோது விஷப்பூச்சி கடித்து அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கேட்கச் சென்ற பெற்றோரையும் பள்ளி நிர்வாகத்தினர் அவ மரியாதையாக நடத்திய தாகக் கூறப்படுகிறது.

சுமார் 800 மாணவிகள் பயிலும் இப்பள்ளியில் போதிய கழிப்பறை வசதி இல்லை என்றும், தூய்மைப் பணியாளர்கள் இல்லாததால் மாணவிகளே தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பள்ளி வளாகத்தில் படர்ந்துள்ள மரங்களைச் சீரமைத்து மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், கழிப்பறைகளைத் தூய்மைப்படுத்தப் பணி யாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.