முந்தய பக்கம்

காந்தி ரோட்டில் மின் வயர் அறுந்து விழுந்தது

6 Jul 2026, 11:36 pm
காந்தி ரோட்டில்  மின் வயர் அறுந்து விழுந்தது
<p><strong>காந்தி ரோட்டில் மின் வயர் அறுந்து விழுந்தது</strong></p><p>ராணிப்பேட்டை, ஜூலை 6- அரக்கோணம் சுவால்பேட்டை காந்தி ரோட்டில் இருந்த உயர்மின் அழுத்த மின் கம்பி எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்ததால், அங்கு இறைச்சி வாங்கிக்கொண்டிருந்த பொதுமக்கள் உயிர் தப்பினர். காந்தி ரோட்டில் உள்ள இறைச்சிக் கடை ஒன்றில் மக்கள் கூட்டம் இருந்த போது, திடீரென மின் கம்பி அறுந்து கீழே விழுந்தது. இதனால் பதற்ற மடைந்த பொதுமக்கள் அங்கிருந்து அலறி யடித்துக்கொண்டு ஓடினர். மின் கம்பி விழுந்த இடத்தில் யாருமில்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள், அப்பகுதிக்கான மின் விநி யோகத்தைத் துண்டித்து, அறுந்த கம்பியை அகற்றிவிட்டு புதிய கம்பியைப் பொருத்தி சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்ததற்கான காரணம் குறித்து மின்வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram