தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரக்கோணத்தின் செம்பதாகை: தோழர் பி.ஆர். கிருஷ்ணமூர்த்தி படத்திறப்பு

13 May 2026, 2:32 am
அரக்கோணத்தின் செம்பதாகை:  தோழர் பி.ஆர். கிருஷ்ணமூர்த்தி படத்திறப்பு

அரக்கோணத்தின் செம்பதாகை: தோழர் பி.ஆர். கிருஷ்ணமூர்த்தி படத்திறப்பு

ராணிப்பேட்டை, மே 12 – அரக்கோணம் நகரிலும் வட்டாரத்திலும் பொதுவுடைமைக் கொள்கைகளுக்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த இடதுசாரி இயக்கத்தி மூத்த தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதிமிக்கக் களப்போராளியுமான தோழர் பி.ஆர். கிருஷ்ணமூர்த்தி (வயது80) கடந்த மே 2 அன்று காலமானார்.

அரக்கோணத்தின் பொதுவுடைமை வரலாற்றில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

தோழர் பி.ஆர்.கே படத்திறப்பு விழா திங்களன்று (மே 11) அரக்கோணத்தில் தாலுகா குழு உறுப்பினர் வி. சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் தோழர் பி.ஆர்.கே படத்தை மூத்த தோழர்.

சுந்தரமூர்த்தி திறந்து வைத்தார். மாவட்ட செயலாளர் பி. ரகுபதி, செம்மலர் சீனிவாசன் ஆகியோர் பேசினார்கள்.

உடன் சிபிஎம் மூத்த தோழர்கள் துரைராஜ், ஆதிவராகன், மாவட்டச் செயலாளர் பி. ரகுபதி, மாவட்டக் குழு உறுப்பினர் ஏபிஎம். சீனிவாசன், தாலுகா குழு உறுப்பினர்கள் த. ஞானமுருகன், வெண்ணிலா, தோழர் பி.ஆர்.கே மகள் சுமதி, மகன் உமாநாத் ஆகியோர் நினைவு கூர்ந்து பேசினர்.

தபால் துறையில் ஒரு வர்க்கப் போராளி 1963-ல் அஞ்சல் தந்தித் துறையில் தினக்கூலி ஊழியராகத் தன் பணியைத் தொடங்கிய பிஆர்கே, தொழிற்சங்க மேதை தோழர் சி.எஸ். பஞ்சாபகேசன் அவர்களால் ஈர்க்கப்பட்டவர்.

பதவி உயர்வில் அரக்கோணம் வந்த அவர், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர் கூட்டமைப்பின் முன்னணி வீரராகத் திகழ்ந்தார்.

அவசரநிலை காலத்தின் அடக்குமுறைகளையும் மீறி, ரகசியமாக கட்சிப் பணியாற்றி இயக்கத்தை வளர்த்தெடுத்த பெருமை இவருக்கு உண்டு. "

தொழிற்சங்கம் சோசலிசத்தின் பள்ளிக்கூடம்" என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்து, அடுத்தடுத்த தலைமுறை இளைஞர்களை மார்க்சியப் பாதையில் வழிநடத்தினார். தன் பிள்ளைகளின் சாதி மறுப்புத் திருமணங்களை முன்னின்று நடத்தி, முற்போக்குச் சிந்தனையைத் தன் வாழ்வியலாகவே மாற்றிக்கொண்டார்.

தீக்கதிர் பணி பணி ஓய்வுக்குப் பின்னும் ஓய்வின்றி இயங்கிய அவர், தீக்கதிர் நாளிதழ் விற்பனையைத் தீவிரப்படுத்தினார்.

விபத்தில் கால் பாதிக்கப்பட்ட நிலையிலும், சொந்தப் பணத்தில் ஆட்டோவில் சென்று வீடு வீடாக தீக்கதிர் விநியோகம் செய்த அவரது உறுதி அனைவரையும் வியக்க வைத்தது.

இறுதி மூச்சு வரை இயக்கம் முதுமையின் காரணமாகப் பேச இயலாத நிலையிலும் கூட, தன்னைக் காண வரும் தோழர்களிடம் சைகை மூலம் கட்சி லெவி தொகையைச் செலுத்தச் சொன்னது, அவரது வர்க்கப் போராட்ட உணர்வைக் காட்டுகிறது.

நம் நினைவுகளில் வாழும் தோழர் பி.ஆர்.கே.அரக்கோணம் பகுதியில் பலம் வாய்ந்த வெகுமக்கள் இயக்கத்தைக் கட்டிய மைப்பதே நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

" அரக்கோணத்தின் வீதிகளில் செங்கொடி ஏந்தி முழக்கமிட்ட அவருக்கு சிபிஎம் செவ்வணக்கத்தைச் செலுத்துகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.