தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரக்கோணத்தில் கட்டிடத் தொழிலாளி வெட்டிக்கொலை: 5 பேர் கைது !

10 May 2026, 1:35 am
அரக்கோணத்தில் கட்டிடத் தொழிலாளி  வெட்டிக்கொலை: 5 பேர் கைது !
<p><strong>அரக்கோணத்தில் கட்டிடத் தொழிலாளி வெட்டிக்கொலை: 5 பேர் கைது !</strong></p><p>ராணிப்பேட்டை, மே 9 - அரக்கோணத்தில் கட்டிடத் தொழி லாளி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். கட்டிடத் தொழி லாளியான இவர், கடந்த புதன்கிழமை அன்று வழக்கம் போல கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று, பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஜெகனை வழிமறித்து கத்திகளால் சரமாரியாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஜெகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழனன்று அவர் உயிரிழந்தார். முதலில் கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்த அரக்கோணம் நகர காவல்துறையினர், ஜெகனின் மறைவுக்குப் பிறகு அதனை கொலை வழக்காக மாற்றினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. விசாரணையில் வெளிவந்துள்ளது. அண்ணாநகர் பகுதியில் ஏற்கெனவே நடைபெற்ற ஒரு கொலை முயற்சி சம்பவத்தில் ஜெகனுக்கும் எதிர்தரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.இந்த முன்விரோதத்தின் காரணமாகவே திட்டமிட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் 5 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, பொன்மணி (29), ராகுல் (26), கையில் விழியன் (25), கோபிநாத் (25), மோசஸ் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.