தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இஸ்ரேல் தேர்தல்: தீர்மானிக்கும் சக்தியாக அரபு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள்

29 Oct 2026, 9:58 pm
இஸ்ரேல் தேர்தல்: தீர்மானிக்கும் சக்தியாக அரபு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள்

இஸ்ரேல் தேர்தல்: தீர்மானிக்கும் சக்தியாக அரபு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள்

டெல் அவிவ், அக்.29-இஸ்ரேல் நாடாளுமன்றத் (நெசெட்) தேர்தலில் எந்தக் கட்சிக்கும், கூட்டணிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியான ‘மக்கி’ இடம்பெற்ற ‘ஹதாஷ்’ தலைமையிலான ‘ஜாயிண்ட் லிஸ்ட்’ கூட்டணிவரலாற்று முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், அரபுக் கட்சிகளின் ஆதரவே அடுத்த ஆட்சியைத் தீர்மானிக்கும்சூழல் உருவாகியுள்ளது. 120 இடங்கள் கொண்ட நெசெட்டில் ஆட்சி அமைக்கப் பெரும்பான்மைக்குத் தேவை 61 இடங்கள்.

யாருக்கு எத்தனை இடம்?

அக்டோபர் 27 அன்று நடைபெற்ற தேர்தலில், சுமார் 90 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பெஞ்சமின் நேதன்யாகுவின் லிகுத் கட்சி 26 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உள்ளது; கடந்த 2022 தேர்தலில் இக்கட்சி 32 இடங்களில் வென்றிருந்தது. லிகுட்டுடன் ஷாஸ் (7), ஐக்கிய தோராயூதம் (7), இடாமர் பென்-கிவிரின் ஓட்ஸ்மா யெகூதித் (7), பெசலெல் ஸ்மோட்ரிச்சின் மத சியோனிஸம் (6) ஆகிய தீவிரவலதுசாரி, மதவாதக் கட்சிகள் இணைந்தநேதன்யாகு கூட்டணி மொத்தம் 53 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது — பெரும்பான்மையை விட 8 இடங்கள் குறைவு. கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் இக்கூட்டணிக்கு 68 இடங்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.நேதன்யாகுவுக்கு எதிராகப் போட்டியிட்ட கடி ஐசென்கோட்டின் ‘யஷார்’ கட்சி 21 இடங்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது; அவரது தலைமையிலான யூத ஆதரவு எதிரணிக் கூட்டணிமொத்தம் 48 இடங்களைப் பெற்றுள்ளது — பெரும்பான்மையை விட 13 இடங்கள் குறைவு. இதற்கிடையே, ‘ஜாயிண்ட் லிஸ்ட்’கூட்டணி 12 இடங்களும், மற்றொரு அரபுக் கட்சியான ‘ராம்’ 7 இடங்களும் எனஅரபுக் கட்சிகள் மொத்தம் 19 இடங்களைவென்று சாதனை படைத்துள்ளன; இதுவரை அவற்றின் உச்ச எண்ணிக்கை 15 ஆக இருந்தது.

கம்யூனிஸ்ட் முன்னேற்றம் — வரலாற்றுச் சாதனை

கடந்த தேர்தலில் 5 முதல் 6 இடங்களையே பெற்றிருந்த ஜாயிண்ட் லிஸ்ட், இம்முறை 12 இடங்களுக்கு உயர்ந்தது அரபு-பாலஸ்தீன மக்களின் அரசியல்பிரதிநிதித்துவத்தில் ஒரு வரலாற்றுச்சாதனை என இக்கூட்டணி தெரிவித்துள்ளது. அரபு மொழி ஊடகமான ‘அல்-கத்’-இடம் பேசிய ஜாயிண்ட் லிஸ்ட் தலைவரும் ஹதாஷ் தலைவருமான யூசப் ஜபரீன், அரபு வாக்காளர்களின் அதிகப்படியான பங்கேற்பும் அதன்மூலம் கிடைத்த பிரதிநிதித்துவமும் பாராட்டுக்குரியவை என்றார். நேதன்யாகு, பென்-கிவிர், ஸ்மோட்ரிச் தலைமையிலான வலதுசாரி அரசை அகற்றுவதே தங்களின் பிரதான இலக்கு என்றாலும், வெறும் தலைமை மாற்றம்போதாது என்றார். அரபு குடிமக்களுக்கான சமத்துவம், அவர்களுக்கு எதிரான குற்றங்களுக்குக் கடுமையான நடவடிக்கை, அரபுநகராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு, வீட்டுரிமை, அங்கீகரிக்கப்படாத கிராமங்களுக்கு ஒப்புதல் ஆகிய அடிப்படைக் கொள்கைகளில் உண்மையான மாற்றமும், பாலஸ்தீனத் தலைமையுடன் மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தையும்வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நிபந்தனையற்ற ஆதரவு இல்லைநேதன்யாகுவை வீழ்த்த முயலும் எதிர்க்கட்சிகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவை ஜாயிண்ட் லிஸ்ட் வழங்காது; அரபு-பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கு முழு உத்தரவாதம் அளிக்கப்பட்டால் மட்டுமே அரசியல் உடன்பாட்டுக்குத் தயார் என ஜபரீன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஓபர்காசிஃப், மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டால் அது நேதன்யாகுவுக்கு வழங்கப்படும் பரிசாகவே அமையும் என எச்சரித்து, அரசியலை மாற்றும் பொறுப்பும் தீர்வும் எதிர்க்கட்சிக் கூட்டணியின் கையில் உள்ளது என்றார்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்

பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேர்தல் திருடப்பட்டது, வெளிநாட்டுச் சதி நடந்தது, அரபுக் கட்சிகள் கத்தார் அரசிடமிருந்து பணம் பெற்றன என ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைநேதன்யாகுவும் அவரது கூட்டணித் தலைவர்களும் பரப்பி, முடிவுகளைத் தாமதப்படுத்தமுயல்வதாக எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்துள்ளன. மறுதேர்தலைத் தவிர்க்குமாறு இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்ஜோக் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்து என்ன?

தனிப்பெரும் கட்சியின் தலைவர் என்ற முறையில் ஆட்சி அமைக்க நேதன்யாகுவுக்கே முதலில் அழைப்பு விடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அவர் 61 றுப்பினர்களின் ஆதரவைத் திரட்டத் தவறினால், எதிரணியைச் சேர்ந்தஐசென்கோட்டுக்கு அழைப்பு விடுக்கப்படலாம்; ஆனால் நேதன்யாகுவின் வலதுசாரி-மதவாதக் கூட்டணியை எளிதில் உடைக்க முடியாத நிலையில், ஆட்சி அமைக்க அவர் அரபுக் கட்சிகளின் ஆதர

வை நாட வேண்டியிருக்கும். எனவே கம்யூனிஸ்ட் ஆதரவு ஜாயிண்ட் லிஸ்ட்டின் இம்முன்னேற்றம், இஸ்ரேலின் எதிர்கால அரசியல் சமநிலையிலும் புதிய ஆட்சி அமைப்பிலும் முக்கியத் தாக்கத்தைஏற்படுத்தும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.