தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘வன்முறையையும் கடந்த காலத்தையும் அல்ல; அழகையும் அமைதியையும் காட்டுங்கள்’ - காஷ்மீர் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

1 hour before
‘வன்முறையையும் கடந்த காலத்தையும் அல்ல;  அழகையும் அமைதியையும் காட்டுங்கள்’ - காஷ்மீர் குறித்து  ஏ.ஆர்.ரஹ்மான்

‘வன்முறையையும் கடந்த காலத்தையும் அல்ல; அழகையும் அமைதியையும் காட்டுங்கள்’ - காஷ்மீர் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

தனது முதல் திரைப்படமான ‘ரோஜா’வில், ‘புது வெள்ளை மழை’ பாடலின் மூலம் காஷ்மீரின்

அழகை தனது இசை வழியாகஏ.ஆர். ரஹ்மான் வெளிப்படுத்தினார். புகழ்பெற்ற இசையமைப்பாளரான அவர், அண்மையில் விளம்பரப் படப்பிடிப்புக்காக காஷ்மீர் பள்ளத்தாக்குக்குச் சென்றிருந்தார்.காஷ்மீரை ஒரு “உத்வேகம் அளிக்கும் இடம்” என்று குறிப்பிட்டரஹ்மான், “திரைப்படக் கலைஞர்கள் மீண்டும் காஷ்மீருக்கு வந்து படப்பிடிப்பு நடத்த வேண்டும். இயற்கையின் அழகையும் அமைதியையும் நேர்மறையான விஷயங்களாக அவர்கள் காட்ட வேண்டும்.

வன்முறை மற்றும் கடந்த காலத்தைப் பற்றிய விஷயங்களை மட்டும் காட்டக் கூடாது. கடந்த காலம் கடந்த காலம்தான். ஆனால், எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது” என்றார்.எதிர்காலத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இசை நிகழ்ச்சி நடத்தவும் விரும்புவதாக இசையமைப்பாளர் ரஹ்மான் தெரிவித்தார். “நான் இங்கு வந்துஇசை நிகழ்ச்சி நடத்தவிரும்புகிறேன். அதற்கான சில திட்டங்கள் எங்களிடம் உள்ளன. அது குறித்து பேசி வருகிறோம்” என்றார்.

மேலும், இந்தி திரைப்பட இசைக் கலைஞர்களுக்கும் காஷ்மீரின் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் இடையே அதிகஅளவில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார். பாரம்பரிய இசை மற்றும் நாட்டுப்புற இசையில் காஷ்மீர் மிகப்பெரிய திறனைக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.செப்டம்பர் 7 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெற்ற ஜம்மு-காஷ்மீர் சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வு குறித்து குறிப்பிட்ட ரஹ்மான், “காஷ்மீர் மிகவும் அழகான இடம். இங்கு சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுவது பாராட்டுக்குரியது”என்றார்.

“இந்தத் திரைப்பட விழா மேலும் வளர்ந்து, மிகப் புகழ்பெற்ற திரைப்பட விழாவாக மாற வேண்டும். ஏராளமான மக்கள் இங்கு வந்து, காஷ்மீர் மக்களின்விருந்தோம்பலை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். திரைப்பட விழாக்களுக்காக நாங்கள்ஆம்ஸ்டர்டாம், லண்டன் போன்ற நகரங்களுக்குச் செல்கி

றோம். இந்தியாவில் காஷ்மீரும் ஒரு முக்கியமான திரைப்பட விழா நடைபெறும் இடமாக மாற வேண்டும் என்றுவிரும்புகிறேன்” என்று ரஹ்மான் கூறினார்.‘நாம் காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்தும்போதெல்லாம், மீண்டும் இங்கு வர வேண்டும் என்று விரும்புகிறோம்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.