மூடப்பட்ட அப்புகோடு அரசுப்பள்ளி: கவலையில் கிராம மக்கள்
6 Jul 2026, 10:18 pm
<p><strong>மூடப்பட்ட அப்புகோடு அரசுப்பள்ளி: கவலையில் கிராம மக்கள்</strong></p><p>உதகை, ஜூலை 6- நீலகிரி மாவட்டம், உதகை முத் தோரை பாலாடா அருகேயுள்ள அப்பு கோடு கிராம அரசு தொடக்கப் பள்ளி, நடப்பு கல்வியாண்டில் மாண வர்கள் சேர்க்கை இல்லாததால் தற் காலிகமாக மூடப்பட்டுள்ளது. நாற் பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த இப்பள்ளி மூடப்பட்டி ருப்பது கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும், அரசுப் பள்ளிகளின் எதிர்காலம் குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அப்புகோடு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமக் குழந்தைகளின் கல்விப் பசியை தீர்க்கும் பொருட்டு, கடந்த 1978-ஆம் ஆண்டு இந்த அரசுத் தொடக்கப் பள்ளி துவங்கப்பட்டது. ஆரம்பக் காலங்களில் இப்பகுதியில் உள்ள ஏழை, எளிய வீட்டுப் பிள் ளைகள் நூற்றுக்கணக்கானோர் இங்கு பயின்று வந்தனர். ஆனால், காலப்போக்கில் பெருகிவிட்ட தனி யார் பள்ளிகளின் மோகத்தாலும், விளம்பரங்களாலும் இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை கணிச மாக குறைந்து, தற்போது முற்றி லும் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட் டுள்ளது. பள்ளி மூடப்பட்டதால் வளாகம் முழுவதும் முட்புதர்கள் மண்டி, பரா மரிப்பின்றி காட்சியளிக்கிறது. கடந்த 2022-23 ஆம் நிதியாண்டில் கூட, மாண வர்களுக்கு தரமான மதிய உணவு வழங்குவதற்காக 7 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நவீன சமைய லறை கட்டிடமும் தற்போது பூட்டிக் கிடக்கிறது. மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட இத்தகைய அரசு உள்கட்டமைப்புகள் வீணாவது சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கிராம மக்கள் மற்றும் அதிகாரிகள் தரப்பு: இதுகுறித்து கிராம மக்கள் கூறு கையில், “ஏழை எளிய நடுத்தர குடும்பங்களின் கலங்கரை விளக்க மாகத் திகழ்ந்த இப்பள்ளி மூடப்பட்டி ருப்பது வருத்தமளிக்கிறது. எனவே, பள்ளி மீண்டும் உயிர்பெற, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளி கல்வித்துறை போர்க்கால அடிப் படையில் விழிப்புணர்வு நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். இப் பள்ளியை நிரந்தரமாக மூடிவிடும் முடிவை அரசு கைவிட வேண்டும்” என்றனர். இதுகுறித்து கல்வித்துறை அதி காரிகள் கூறுகையில், “மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் மட்டுமே பள்ளி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மாணவர்கள் சேரும் பட்சத்தில் உடனடியாக மீண் டும் திறக்கப்படும். பள்ளியை நிரந் தரமாக மூடும் திட்டம் தற்போதைக்கு அரசிடம் இல்லை” எனத் தெரிவித்த னர். தனியார் பள்ளிகளுக்கு இணை யாக அரசுப் பள்ளிகளில் உள்கட்ட மைப்புகளும், சத்துணவுத் திட்டங்க ளும் மேம்படுத்தப்பட்டு வரும் சூழ லில், கிராமப்புறக் குழந்தைகளின் கல்வி உரிமையை பாதுகாக்கவும், சமூக சமத்துவத்தை நிலைநாட்ட வும் இத்தகைய அரசுப் பள்ளிகள் தொடர்ந்து இயங்குவது காலத்தின் கட்டாயமாகும்.</p>
