வாய்ப்பு வாசல்
31 Dec 2025, 3:37 pm

வாய்ப்பு வாசல்

இஸ்ரோவில் அப்ரண்டிஸ் பயிற்சி

இஸ்ரோவுக்குக் கீழ் இயங்கும் திரவ எரிபொருள் ஆராய்ச்சி மையத்தில் பட்டதாரிகளுக்கு ஒரு வருட அப்ரண்டிஸ் (கிராஜுவேட் அப்ரண்டீஸ், டெக்னீசியன் அப்ரண்டிஸ்) பயிற்சி உதவித்தொகை யுடன் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு பொறியியல் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் B.E/ B.Tech / டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். 2021-க்கு பிறகு படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். ஏனெனில் அப்ர ண்டீஸ் பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கிராஜுவேட் அப்ரண்டிஸ் பணிக்கு குறைந்தபட்சம் 28- க்குள் வயது இருக்க வேண்டும். டெக்னீசியன் அப்ரண்டிஸ் பணிக்கு 35- க்குள் வயது இருக்க வேண்டும். டிசம்பர் 20,2025 தேதியின்படி கணக்கிடப்படும். மேலும் உச்ச வயது வரம்பில் எஸ்சி/ எஸ்டி/ஓபிசி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைகளின்படி தளர்ச்சி இருக்கும். விண்ணப்பிப்பதற்கான இணைப்பு, கல்வித்தகுதி, தேர்வுமுறை உள்ளிட்ட கூடுதல் விபரங்களைப் பெற www.iprc.gov.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித்தேதி ஜனவரி 10, 2026 ஆகும்.

பிஎஸ்எப் ராணுவப் படையில் 549 காலிப் பணியிடங்கள்

மத்திய துணை ராணுவப்படைகளில் ஒன்றான எல்லைப் பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் பணிக்கு காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு விளையாட்டு வீரர்கள் (ஆண்,பெண்) விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஏதேனும் ஒரு விளையாட்டு பிரிவுகளில் தேசிய/ மாநில அளவிலான போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றிருக்க வேண்டும் அல்லது பங்கு பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : குறைந்தபட்சம் 18 வயது, அதிகபட்சமாக 23 என்று நிர்ணயிக்கப்பட்டி ருக்கிறது. ஆகஸ்ட் 8, 2026 தேதியின்படி கணக்கிடப்படும். மேலும் உச்ச வயது வரம்பில் எஸ்சி/ எஸ்டி/ஓபிசி பிரிவினர்களுக்கு ஒன்றிய அரசு விதிமுறைகளின் படி தளர்ச்சி உண்டு. தேர்வு முறை : விளையாட்டுத் திறன், உடற் தகுதி, மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு நடைபெறும் இடம், தேர்வுத்தேதி ஆகியவை மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். குறிப்பு : ஜனவரி 15, 2024 தேதிக்கு பின்னர் நடத்தப்பட்ட விளையாட்டு சாதனைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பக் கட்டணம்: இதர பிரிவினர்களுக்கு ரூ.159 தொகையை விண்ணப்ப படிவத்துடன் இணைக்கப்பட்டுள்ள சலான் மூலம் செலுத்த வேண்டும். எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு கட்டணம் இல்லை. இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த காலியிடங்களின் எண்ணிக்கை, தேர்விற்கான விண்ணப்பம், விரிவான பாடத்திட்டம், மதிப்பெண் விபரம் உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் அறிவிக்கையில் முழுமையாகத் தரப்பட்டுள்ளன. முழுமையான அறிவிக்கையைப் பெற www.rectt.bsf.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பங்களை நிரப்புவதற்கான கடைசித்தேதி ஜனவரி 15, 2026 ஆகும்.

பிஒஐ (BOI) – வங்கியில் வேலை - 549

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியாவில் கிரெடிட் ஆபிசர் பணிக்கு 514 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் நிதி அல்லது வங்கியியல் பிரிவுகளில் முதுநிலை மேலாண்மை (MBA) பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கதாகும். பொதுத்துறை/ தனியார் துறை வங்கிகளில் கிரெடிட் ஆபிசராக குறைந்தது 3 முதல் 8 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : நவம்பர் 1,2025 தேதியின்படி கணக்கிடப்படும். மேலும் உச்சபட்ச வயது வரம்பில் எஸ்சி/ எஸ்டி/ஓபிசி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைகளின்படி தளர்ச்சி வழங்கப்படும். தேர்வு முறை : பணி அனுபவம் மற்றும் கல்வித் தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இது பற்றிய முழு விபரம் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். விண்ணப்பக் கட்டணம்: பொது/ ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.850 மற்றும். எஸ்சி / எஸ்டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு கட்டணம் இல்லை. இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த பிரிவு வாரியான காலியிடங்களின் எண்ணிக்கை, தேர்விற்கான விண்ணப்பம், விரிவான பாடத்திட்டம், மதிப்பெண் விபரம் உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் அறிவிக்கையில் முழுமையாகத் தரப்பட்டுள்ளன. முழுமையான அறிவிக்கையைப் பெற www.bankofindia.bank.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பங்களை நிரப்புவதற்கான கடைசித்தேதி ஜனவரி 5, 2026 ஆகும்.