வாய்ப்பு வாசல்
25 Dec 2025, 5:24 pm

தொழில் பழகுநர் பயிற்சி 3 அரசு நிறுவனங்கள்

ஐடிஐ, பட்டயப்படிப்பு மற்றும் பொறியியல் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறு வனத்தில் (537), ரயில்வேயில்(550) மற்றும் இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான மஸகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் (200) தொழில் பழகுநர் பயிற்சிக்கான வாய்ப்பு கள் வந்துள்ளன. காலியாகவுள்ள தொழில் பழகுநர் பணி யிடங்களின் எண்ணிக்கை, கல்வித்தகுதிகள், தேர்வுமுறை உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் இரண்டு நிறுவனங்களின் அறி விக்கைகளில் தரப்பட்டிருக்கின்றன. அதிகபட்ச வயது வரம்பில் 3 நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டுப் பிரிவின ருக்குத் தளர்ச்சி வழங்கப்படும். இந்தியன் ஆயில் - 537 இந்த நிறுவனத்தில் தொழில் பயிற்சி பெற விரும்புவர்கள் 18 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். டிசம்பர் 31, 2025 ஆம் தேதியின்படி வயது கணக்கில் எடுத்துக் கொள்ளப் படும். பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சிக் காலத்தில் உதவித்தொகை வழங்கப்படும்.எழுத்துத்தேர்வு, கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு இருக்கும். இதுகுறித்த விபரங்களுக்குwww.iocl.com என்ற தளத்தைப்பார்வையிடலாம். இதற்கு விண்ணப்பிக்கக் கடைசித் தேதி ஜனவரி 9, 2026 ஆகும். இந்திய ரயில்வே - 550 வயது வரம்பைப் பொறுத்தவரை, குறைந்தபட்சமாக 15 வயதும், அதிகபட்சமாக 24உம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. பத்தாம் வகுப்புக்குப் பிறகு ஐடிஐ சான்றிதழ் படிப்பை நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு இருக்கும். இது குறித்த விபரங்கள் www.rcf.indianrailways.gov.in என்ற தளத்தில் தரப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிப்பதற்கு கடைசித்தேதி ஜனவரி 7, 2026 ஆகும். மஸகான் கப்பல் கட்டும் நிறுவனம் - 200 இந்தப் பணியிடங்களுக்கு குறைந்தபட்சமாக 18 வயதும், அதிக பட்சமாக 27 வயதும் இருக்க வேண்டும். வயது வரம்பு மார்ச் 1, 2026 ஆம் தேதியின்படி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். கல்வித்தகுதிக்கான படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு இருக்கும். இது குறித்த முழு விபரங்களை www.mazagondock.in என்ற இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிக்கக் கடைசித்தேதி ஜனவரி 5, 2026 ஆகும்.

ரயில்வேயில் 311 காலிப் பணியிடங்கள் இந்திய ரயில்வே துறையில் 311 காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். மொழிபெயர்ப்பாளர் , ஆய்வக உதவியாளர், தலைமை சட்ட உதவியாளர் போன்ற பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. +2 வில்/டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதர பிரிவினர்களுக்கு ரூ. 500 மற்றும் பெண்கள் எஸ்சி/ எஸ்டி பிரிவினர்களுக்கு ரூ. 250 மட்டும் செலுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிப்பதற்கான இணைப்பு, கல்வித்தகுதி, தேர்வுமுறை உள்ளிட்ட கூடுதல் விபரங்களைப் பெற www.rrbapply.gov.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித்தேதி ஜனவரி 29, 2026 ஆகும்.

முன்னறிவிப்பு ரயில்வேயில் 18 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான முன்னறிவிப்பை ரயில்வே வெளியிட்டிருக்கிறது. இது ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி 22 ஆயிரம் பணியிடங்களை நிரப்பப் போகிறார்கள். விண்ணப்பம் நிரப்புவது ஜனவரி 21, 2026 அன்று துவங்கி, பிப்ரவரி 20, 2026 அன்று கடைசித் தேதியாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தேர்வர்கள் அசல் அறிவிக்கை வரும் வரையில் காத்திருப்பது நல்லது. இதுபோன்றதொரு முன்னறிவிப்புகள் ஊடகங்களில் வெளியாகி, பின்னர் அப்படி எதுவும் வராது என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டிஆர்டிஒ நிறுவனத்தில் 764 காலிப் பணியிடங்கள்

இந்திய பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கி வரும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவுள் ளது. சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் -பி (B), டெக்னீசி யன் ஏ(A) பணிகளுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: பொறியியல் பாடப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும் அல்லது அறிவியல் துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சில பணியிடங்களுக்கு ஐடிஐ சான்றிதழ் பெற்றிருந்தால் போதுமானது. வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது, அதிக பட்சமாக 28 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி 1, 2026 தேதியின்படி கணக்கிடப்படும். மேலும் உச்ச வயது வரம்பில் எஸ்சி/ எஸ்டி பிரிவினர்களுக்கு மத்திய அரசு விதிமுறைகளின் படி தளர்ச்சி அளிக்கப்படும். தேர்வு முறை: டிஆர்டிஒ நிறுவனத்தால் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இது பற்றிய விபரம் தேர்வர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம்: சீனியர் டெக்னீசியன் பணிக்கு பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.750, டெக்னீசியன் ஏ பணிக்கு ரூ.600 செலுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். எஸ்சி / எஸ்டி பிரிவி னர்களுக்கு ரூ.500 செலுத்த வேண்டும். விண்ணப்பித்த பிறகு நிரப்பப்பட்ட படிவத்தை நகல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். நேர்முகத்தேர்வின்போது அது தேவைப்படும். இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த பாடவாரியான காலியிடங்களின் எண்ணிக்கை, தேர்விற்கான விண்ணப்பம், விரிவான பாடத்திட்டம், மதிப்பெண் விபரம் உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் அறிவிக்கையில் முழுமையாகத் தரப்பட்டுள்ளன. முழுமையான அறிவிக்கையைப் பெற www.drdo.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பங்களை நிரப்புவதற்கான கடைசித்தேதி ஜனவரி 1, 2026 ஆகும்.