திருப்பூர் 22 ஆவது புத்தகத் திருவிழா சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு
7 Feb 2026, 5:37 pm
<p><strong>திருப்பூர் 22 ஆவது புத்தகத் திருவிழா சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு</strong></p>
<p>திருப்பூர், பிப்.7- திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்திய 22 ஆவது புத்தகத் திருவிழா வெற்றிகர மாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அதில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களுக் கான பாராட்டு விழா சனியன்று ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே தலைமையில் நடை பெற்ற இந்த விழாவில், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி அவர் பேசுகையில், திருப்பூரில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி பிப்ரவரி 3-ஆம் தேதி வரை 10 நாட்கள் வேலன் ஹோட்டல் வளாகத்தில் இந்த அறிவுத் திருவிழா மிகச்சிறப் பாக நடைபெற்றது. 140 புத்தக அரங்குகள் மற்றும் 10 அரசுத் துறை அரங்குகள் என மொத்தம் 150 அரங்குகள் அமைக் கப்பட்டிருந்தன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்பு களில், 10 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் இடம் பெற்றன. புத்தகத் திருவிழா எவ்வித தடையுமின்றி சிறப் பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு வாழ்த்து களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்தி கேயன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜ், வருவாய் கோட்டாட்சியர் சிவபிரகாஷ், பின்னல் புக் டிரஸ்ட் தலைவர் இரா.ஈஸ்வரன், மாவட்ட நூலக அலுவலர் கு.போ. ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
