முந்தய பக்கம்

ஆனந்ததாண்டவபுரம் அரசுப் பள்ளி ஆசிரியைக்கு பாராட்டு

11 Feb 2026, 5:52 pm
ஆனந்ததாண்டவபுரம்  அரசுப் பள்ளி ஆசிரியைக்கு பாராட்டு
<p><strong>ஆனந்ததாண்டவபுரம் &nbsp;அரசுப் பள்ளி ஆசிரியைக்கு பாராட்டு</strong></p> <p>மயிலாடுதுறை, பிப்.11 - மயிலாடுதுறை மாவட்ட பாரத சாரண - சாரணியர் இயக்கத்தின் மாவட்ட ஆண்டு முகாம் பிப்.6 முதல் 8 வரை மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது. &nbsp;இம்முகாமில் மாவட்ட சாரணிய பயிற்சி &nbsp;ஆணையரும் தலைமை பயிற்சியாளரு மான நல்லாசிரியை ஆர்.ஜி.கலைமதி தலை மையில், ஆனந்ததாண்டவபுரம் அரசு மேல் நிலைப் பள்ளி சாரணியர்கள் பங்கேற்றனர். மாணவி தரணிகா முடிச்சுகள் போட்டியில் 3 ஆம் இடம் பெற்று சான்றிதழ் மற்றும் கோப்பை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். &nbsp;ஆனந்ததாண்டவபுரம் அரசு மேல் நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்ற முதல் &nbsp;ஆண்டு முகாமிலேயே வெற்றி பெறும் அள விற்கு மாணவிகளுக்கு சிறப்பாக பயிற்சி அளித்த நல்லாசிரியை ஆர்.ஜி.கலைமதி மற்றும் மாணவிகளுக்கு தலைமை ஆசிரி யர் வை.முத்துசிவம், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர் ஆசிரியர் &nbsp;கழகத்தினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram