மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட்டு விழா போராட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு கௌரவம்
9 Mar 2026, 4:24 pm
<p><strong>மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட்டு விழா போராட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு கௌரவம்</strong></p>
<p>தருமபுரி, மார்ச் 9- மாற்றுத்திறனாளிகளின் உரிமைக ளுக்கான போராட்டத்தில் பங்கேற்ற வர்களுக்கு பாராட்டு விழா திங்க ளன்று நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ஆந்திர மாநிலத்தைப் போல உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அண்மையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் நடை பெற்ற போராட்டம் மற்றும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற காலவரையற்ற மறியல் போராட்டம் ஆகியவற்றில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளைப் பாராட்டி கௌரவிக்கும் விழா தருமபுரி மற்றும் அரூரில் நடைபெற்றது. தருமபுரி ’முத்து இல்லத்தில்’ நடை பெற்ற விழாவிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி. தமிழ்செல்வி தலைமை வகித்தார். இதில் மாநிலத் தலைவர் தோ. வில்சன், மாநிலப் பொரு ளாளர் கே.ஆர். சக்கரவர்த்தி ஆகி யோர் சிறப்பு விருந்தினர்களாக பங் கேற்று, உரிமைப் போராட்டத்தில் உறு தியுடன் பங்கேற்ற மாற்றுத்திறனாளி களை பாராட்டிப் பேசினர். இவ்விழாவில் மாவட்டச் செயலா ளர் எம். மாரிமுத்து, மாவட்டப் பொருளா ளர் ஜி. மாதேசன், மாவட்டத் துணைச் செயலாளர் கே. சுசிலா மற்றும் வட்டச் செயலாளர் எம். பழனி உள்ளிட்ட நிர் வாகிகள் திரளாகப் பங்கேற்றனர். இதேபோல் அரூரில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு ஒன்றியத் தலை வர் கே. காந்தி தலைமை வகித்தார். இவ்விழாவில் மாவட்டத் தலைவர் ஜி. தமிழ்செல்வி மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் சி. வேலாயுதசாமி ஆகியோர் பங்கேற்று, போராட்டக் களத்தில் நின்ற மாற்றுத்திறனாளிகளின் தியாகத்தையும், துணிச்சலையும் பாராட்டிப் பேசினர்.</p>
