பிப். 8-இல் முதல்வருக்குப் பாராட்டு விழா! அரசு ஊழியர் - ஆசிரியர்கள் அறிவிப்பு
27 Jan 2026, 3:28 pm
<p><strong>பிப். 8-இல் முதல்வருக்குப் பாராட்டு விழா! அரசு ஊழியர் - ஆசிரியர்கள் அறிவிப்பு </strong></p>
<p>சென்னை, ஜன.27- முதலமைச்சருக்கு பிப்ரவரி 8 அன்று சென்னை நந்த னம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பாராட்டு விழா நடை பெறும் என்று ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி, 25 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வந்த பின்னணியில், இக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழக முதலமைச்சர், அண்மையில் உறுதி யளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தார். இதனை அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களை மகிழ்ச்சியுடன் வர வேற்று முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். இதையடுத்து, பிப்ரவரி 8 அன்று சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், முதலமைச்சருக்கு பாராட்டு விழாவையும் அறிவித்துள்ளனர். ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டத்திற்குப் பின், இந்த பாராட்டு விழா அறிவிப்பை சென்னையில் செவ்வாயன்று ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் வெ. சோம சுந்தரம், இரா. தாஸ் ஆகியோர் வெளியிட்டனர். “அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பல்வேறு துறை வாரிக் கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. இருப்பி னும், ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்த முதலமைச்ச ருக்கு பாராட்டு விழா மற்றும் உரிமை மீட்பு மாநாட்டை நடத்த உள்ளோம்” என்றனர். “முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பாராட்டும் அதேநேரத்தில், ஓய்வூதிய திட்டத்தில் 10 சதவிகிதம் ஊழி யர் பங்களிப்பு என்பதை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை சாசனத்தையும் வழங்க உள்ளோம். இந்த மாநாட்டில் சுமார் 2 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள்” என்றும் அவர்கள் கூறினர்.</p>
