பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
31 Mar 2026, 4:50 pm
<p><strong>பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா</strong></p>
<p>கரூர், மார்ச் 31- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, கரூர் வட்டாரக் குழு சார்பில், மகளிர் தினம் மற்றும் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கரூர் வட்டாரத் தலைவர் ச. ஜெயமணி தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் ஆ. பிரான்சிஸ் டேனியல் ராஜா வரவேற்று பேசினார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொருளாளர் தா. கணேசன், மாநிலச் செயலாளர் ஜ. ஜெயராஜ், மாநில துணைத் தலைவர் ஏ. கிருஷ்ணவேணி, மாவட்டத் தலைவர் எம்.ஏ. ராஜா, மாவட்டச் செயலாளர் சு. அமுதன், மாவட்டப் பொருளாளர் ஆ. தமிழரசி ஆகியோர் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பொன் ஜெயராம், மாவட்ட தலைவர் எம்.எஸ். அன்பழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வட்டார பொருளாளர் த. பத்மநாதன் நன்றி கூறினார். மகளிர் தின விழாவில் பெண்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற 8 ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.</p>
