இலக்கியத் திருவிழாவில் பாராட்டு
21 Jan 2026, 3:58 pm
<p><strong>இலக்கியத் திருவிழாவில் பாராட்டு</strong></p>
<p>ஈரோடு, ஜன.21- ஈரோட்டில் நடைபெற்ற இளை ஞர் இலக்கியத் திருவிழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி னார். சிறுவாணி இளைஞர் இலக்கிய திருவிழாவினை முன்னிட்டு, ஈரோடு கொங்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மற்றும் திட்ட மலை அரசு கலை அறிவியல் கல்லூ ரியில் ஜன.5 முதல் 8 ஆம் தேதி இரண்டு நிமிடப் பேச்சுப்போட்டி, நுால் அறிமுகப் போட்டி, இலக் கிய வினாடி வினாப் போட்டி, உட னடி ஹைக்கூ உருவாக்கம், ஓவியப் போட்டி, விவாத மேடை, பேச்சுப் போட்டி, தொன்மையும் தொடர்ச்சி யும் படத்தொகுப்பு உருவாக்கம், புத்தக விமர்சனம், உடனடி பொறி யியல், போன்ற போட்டிகள் நடை பெற்றது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற 60 கல்லுாரி மாணவர்க ளுக்கு பரிசளிக்கும் விழா புதனன்று நடைபெற்றது. ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், இளை ஞர் இலக்கியத் திருவிழா - 2026 மற்றும் திருக்குறள், வினாடி - வினா எழுத்துத்தேர்வு ஆகிய போட்டிக ளில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி புத னன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் ச.கந்த சாமி, வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு ரூ.2,40,000க்கான பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, ஜன.9 ஆம் தேதி நாளன்று ஈரோடு அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருக்குறள் - வினாடிவினா எழுத் துத்தேர்வு நடைபெற்றது. இத்தேர் வில் ஆசிரியர்கள், அரசு ஊழியர் கள் என மொத்தம் 58 நபர்கள் கலந்து கொண்டனர். மேலும், ஜன.20 ஆம் தேதியன்று அன்று திருப்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான திருக்குறள் வாரவிழா “குறளாசி ரியர் மாநாடு 2026” இல் ஆசிரி யர்கள் சார்பில் 15 நபர்களும், அரசு ஊழியர்கள் சார்பில் 15 நபர்களும் என மொத்தம் 30 நபர்கள் குறள் கோர்வைப் போட்டி, புதிர் போட்டி, குறள் கூறுதல் போட்டி, ஆகிய போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றனர். இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 30 நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.</p>
