முந்தய பக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை!

6 Dec 2025, 2:48 pm
மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை!
<p><strong>மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை!</strong></p> <p>அமைச்சர் வழங்கினார்! ஈரோடு, டிச.6- தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகா மில் தேர்வு பெற்ற வேலை நாடுபவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார். ஈரோடு, திண்டல் வேளாளர் பொறியி யல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்ற வேலை நாடுனர்களுக்கு பணி &nbsp;நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சனி யன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதன்பின் அவர் பேசுகையில், மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம் சார்பில், வேலைவாய்ப்பு முகாமானது 2021 ஆம் ஆண்டு முதல் துவங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, சனி யன்று நடைபெற்ற இந்த முகாமில் 229 முன் னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு, &nbsp;காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தி தேர்வு செய்தனர். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலை நாடுபவர்கள் கலந்து கொண்டனர். இதுவரை 700 வேலை நாடுபவர்கள், தனியார் நிறுவனங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள் ளது. மாற்றுத்திறனாளிகளும் அதிக அள வில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், என்றார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி, அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி., வி.சி.சந்திர குமார் எம்எல்ஏ, மாநகராட்சி ஆணையர் அர் பித் ஜெயின், உதவி ஆட்சியர் (பயிற்சி) காஞ் சன் சௌதரி, துணை மேயர் வே.செல்வ ராஜ், 3 ஆம் மண்டல குழுத்தலைவர் சசி குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram