தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டுத் துறையின் ஒதுக்கீடு மூலம் காவலராக பணி நியமனம்: பாராட்டு

7 Feb 2026, 5:37 pm
விளையாட்டுத் துறையின் ஒதுக்கீடு மூலம் காவலராக பணி நியமனம்: பாராட்டு
<p><strong>விளையாட்டுத் துறையின் ஒதுக்கீடு மூலம் காவலராக பணி நியமனம்: பாராட்டு</strong></p> <p>தருமபுரி, பிப்.7- விளையாட்டுத் துறையின் ஒதுக்கீடு மூலம், காவல ராக பணி நியமனம் பெற்ற முதுநிலை மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை இயற்பியல் துறையில் பயின்று வருபவர் ஜெ.நிவாஸ். &nbsp;இவர் சேலம் பெரியார் பல்கலைக்கழக கல்லூரிக ளுக்கு இடையிலான வாலிபால் போட்டியில் சிறப்பான &nbsp;முறையில் விளையாடி, பல்கலைக்கழக அணிக்காக &nbsp;தேர்வு செய்யப்பட்டு, தென்னிந்திய பல்கலைக்கழகங் களுக்கு இடையிலான போட்டிகளிலே பங்கேற்று &nbsp;படிவம் -3 விளையாட்டு சான்றிதழை பெற்றுள்ளார். &nbsp;இதைத்தொடர்ந்து, இந்திய அரசின் தொழில் பாது காப்புப்படையில் காவலர் பதவிக்கு விண்ணப்பித் தார். இவர் பெற்றுள்ள படிவம்-3 சான்றிதழின் அடிப்படையில், விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் இவருக்கு இந்திய அரசின் தொழில் பாதுகாப்புப் படையின் மூலம் காவலருக்கான பணி நியமன ஆணை &nbsp;வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இவர் ராஜஸ்தான் மாநிலம், மகாராணா ஆழ்வார் காவலர் &nbsp;பயிற்சிப்பள்ளியில் திங்களன்று (நாளை) பணிக் காக ஆஜராக உள்ளார். இதனிடையே, அரசு கலைக் கல்லூரியில் பயின்று, இந்திய அரசின் தொழில் பாது காப்பு படையில் காவலராக பணி நியமன ஆணை பெற்ற மாணவன் ஜே.நிவாஸ்-யை கல்லூரியின் முதல் வர் கோ.கண்ணன் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்வில் கல்லூரியின் உடற் கல்வித்துறை இயக்குநர் கு.பாலமுருகன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.