தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காவல்துறையின் பொய் வழக்கிலிருந்து வாலிபர் சங்கத்தினர் 17 பேர் விடுதலை

17 Mar 2026, 3:26 pm
காவல்துறையின் பொய் வழக்கிலிருந்து  வாலிபர் சங்கத்தினர் 17 பேர் விடுதலை
<p><strong>காவல்துறையின் பொய் வழக்கிலிருந்து&nbsp;வாலிபர் சங்கத்தினர் 17 பேர் விடுதலை</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, மார்ச் 17- &nbsp;திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில், கடந்த 2018 ஜனவரி 31 ஆம் தேதி, அன்றைய எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு பேருந்து கட்டணத்தை கடுமையாக உயர்த்தியதை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் &ldquo;கழுதைக்கு மனு கொடுக்கும்&rdquo; போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தை தொடர்ந்து காவல்துறையினர் 17 பேரை கைது செய்து, அவர்களை 5 நாட்கள் மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், செவ்வாயன்று (மார்ச் 17) நீதிமன்றம் 17 பேரையும் விடுதலை செய்துள்ளது. &nbsp;இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தோழர்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல், தொடர்ந்து நீதிமன்றத்தில் வாதாடி விடுதலை பெற்றுத்தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் வி. ரங்கராஜனுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டன. இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர்களில் வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் லெனின், பகுதி குழுச் செயலாளர் தர்மா, முன்னாள் நிர்வாகிகள் மணிமாறன், சுப்பிரமணி, ஜெய், சந்துரு, நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட 17 தோழர்கள் அடங்குவர். நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வாலிபர் சங்கத்தினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் வரவேற்றுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.