தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

6 Dec 2025, 6:20 pm
திருச்சி விரைவு செய்திகள்

ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சிராப்பள்ளி, டிச.6 - திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குழந்தைகள் நலன்  மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின்கீழ் இயங்கும்  அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள்  இல்லத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு ஆற்றுப் படுத்துநர்கள் மூலம் மதிப்பூதியம் அடிப்படையில் ஆற்றுப் படுத்துதல் சேவை வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இப்பதவிக்கு தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுப் படுத்துதலில் முதுகலைப் பட்டம் பெற்ற நபர்கள் அவர்களது விண்ணப்பங்களை உரிய கல்விச் சான்று களின் ஒளிநகலுடன் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படு கிறது. தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் தேர்வுக் குழு மூலம் நேர்முகத் தேர்வு  அடிப்படையில் தேர்வு செய்யப்படும். அரசு குழந்தைகள் இல்லத்திற்கு ஒரு பணியிடம் தேர்வு  செய்யப்படும் ஆற்றுப்படுத்துநர்களுக்கு வருகையின் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு 108 நாட்களுக்கு மிகா மல் மதிப்பூதியம் அடிப்படையில் ஒரு வருகைக்கு போக்கு வரத்து செலவு உட்பட ரூ.1000 மட்டும் வழங்கப்படும் (அதிக பட்சமாக ஒரு நபருக்கு மாதம் 9 அமர்வுகள் மட்டும்).  விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பங்களை திருச்சி ராப்பள்ளி மாவட்ட https://tiruchirappalli.nic.in  என்ற  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கண்காணிப்பாளர்,  அன்னை சத்யா அம்மையார் அரசு குழந்தைகள் இல்லம்,  ஆவூர் ரோடு, மாத்தூர், திருச்சி– 622515 என்ற முகவரிக்கு  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 22.12.2025 மாலை 5  மணிக்குள் வந்த சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும்.  மேற்கூறிய காலவரையறைக்கு பின் வரும் விண்ணப்பங்கள்  ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் விபரங்களுக்கு 04339-250074,  6369104191 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள லாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்து உள்ளார்.

அரசுப் பள்ளியில்  தமிழ் கூடல் நிகழ்ச்சி

பெரம்பலூர், டிச.6 - பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட கை. களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி பள்ளி யின் தலைமை ஆசிரியர் வையாபுரி தலைமையில் நடைபெற்றது.  வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தமிழ் ஆசிரியர்  மோகன் பங்கேற்றார்.  இந்நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற பட்டதாரி ஆசிரியர்  தனராசு, பள்ளியின் முதுகலை ஆசிரியர் சுரேஷ், பட்டதாரி ஆசிரி யர் சரவணன், ராஜா மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஜெயராமன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக முதுகலை ஆசிரியர் ராமர்  வரவேற்புரையாற்றினார். ஆசிரியை அன்பழகி நன்றி தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.