முந்தய பக்கம்

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! அமைச்சர் ரகுபதி அறிவிப்பு

6 Jan 2026, 3:29 pm
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!  அமைச்சர் ரகுபதி அறிவிப்பு
<p><strong>உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! &nbsp;அமைச்சர் ரகுபதி அறிவிப்பு</strong></p> <p>சென்னை, ஜன. 6 - திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள நில அளவைத் தூணில் தீபம் ஏற்றலாம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் 2 நீதி பதிகள் அமர்வு அளித்துள்ள தீர்ப்பை &nbsp;எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்யும் என்று அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயல கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ். ரகுபதி, &ldquo;தனிப்பட்ட ஒருவரின் கோரிக்கைக்காக இல்லாத வழக்கத்தை நடைமுறைப்படுத்த முடியாது&rdquo; என்று தெரிவித்தார். &ldquo;தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்த ரவு சட்டத்திற்கு முரண்பாடான செயல்&rdquo; என்று குறிப்பிட்ட அவர், &ldquo;தீபம் ஏற்ற வேண்டும் என்றால், அதற்கான ஆதாரங்களின் அடிப்படை யில் தான் நீதிபதிகள் தீர்ப்பளிக்க வேண்டும்&rdquo; என்றார். மேலும், &ldquo;வழக்கத்தில் இல்லாத ஒன்றை ஏன் &nbsp;நீதிமன்றம் புகுத்த வேண்டும் என்பது தான் மக்களின் கேள்வி&rdquo; என்ற அமைச்சர் ரகுபதி, &ldquo;உச்சநீதிமன்றத் தில் நல்ல தீர்ப்பை பெறுவோம்&rdquo; என்று நம்பிக்கை தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram