அப்போலோ மருத்துவமனையில் ஊட்டச்சத்து திருவிழா
26 Sept 2026, 10:06 pm

அப்போலோ மருத்துவமனையில் ஊட்டச்சத்து திருவிழா

கரூர், செப். 26- ஊட்டச்சத்து விழிப்புணர்வு, நோய் தடுப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வலியுறுத்தி, கரூர் அப்போலோ மருத்துவமனையில் இரண்டு நாட்கள்‘ஊட்டச்சத்து திருவிழா 2026’ நடைபெற்றது.

அன்னை மகளிர் கல்லூரி மற்றும் அர்பிந்தோ நர்சிங் கல்லூரித் தலைவர் ஏ.ஆர். மலையப்பசாமி `சரியான உணவைத் தேர்ந்தெடுத்து, சிறப்பாக வாழ்வோம்’ என்ற கருப்பொருளிலான உணவு திருவிழாவை தொடங்கிவைத்தார்.

நோயாளிகள், குடும்பத்தினர், பள்ளி கல்லூரி மாணவர்கள், நிறுவன ஊழியர்கள், சுகாதார நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். சமச்சீர் உணவுத் தட்டு, உணவில் மறைந்துள்ள உப்புச்சர்க்கரை, அதிக உப்பின் ஆபத்துகள், பானங்களின் தன்மை, பாரம்பரிய உணவுகள், மூளை ஆரோக்கியத்திற்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்த தவறான நம்பிக்கைகள் தொடர்பான கண்காட்சிகள் இடம்பெற்றன.

சர்க்கரை நோய், உடல் பருமன், இதயநலம், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கினர். உணவுப் பழக்கம், உடல் எடை மேலாண்மை மற்றும் நோய் தடுப்பு தொடர்பாகப் பங்கேற்பாளர்களுக்கு நேரடி ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

ஊட்டச்சத்து அறிவுக்கும் அன்றாட நடைமுறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதே நோக்கம். விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் சமூக ஆரோக்கியத்தை மேம்படுத்தத் தொடர்ந்து செயல்படுவோம் என மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் கற்பகவள்ளி தெரிவித்தார்.