உள்கட்டமைப்பு வசதி இன்றி அடுக்குமாடி குடியிருப்பு: செட்டிபாளையத்தில் குடியேற முடியாமல் பயனாளிகள் தவிப்பு
2 Dec 2025, 4:11 pm
<p><strong>உள்கட்டமைப்பு வசதி இன்றி அடுக்குமாடி குடியிருப்பு: செட்டிபாளையத்தில் குடியேற முடியாமல் பயனாளிகள் தவிப்பு</strong></p>
<p>திருப்பூர், டிச.2- திருப்பூர் செட்டிபாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில், உள்கட்டமைப்பு வசதி முழுமையாகச் செய் யப்படாததால், குடியேற முடியாமல் பங்க ளிப்புத் தொகை கட்டி வீடுகள் பெற்றவர்கள் குடியேற முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், திருப்பூர் மாவட்டம் செட்டிபா ளையம் பகுதியில் ரூ.23.76 கோடி மதிப்பீட் டில் 240 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடு களை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். பயனா ளிகள், பங்களிப்புத் தொகையாக ரூ.1.96 லட் சம் செலுத்தி இந்த வீடுகளை பெற்றுள்ள னர். இந்நிலையில், இங்கு மின் இணைப்பு, சாக்கடைக் கால்வாய், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்புகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றி முடிக் கப்படவில்லை. இதனால், வீடுகள் பெற்றும், குடியேற முடியாமல், பயனாளிகள் தவித்து வருகின்றனர். இது குறித்து பயனாளிகள் சிலர் தெரிவிக் கையில், திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வீடு கேட்டு விண்ணப்பித்துக் காத்திருந்தோருக்கு, மூன்று மாதங்களுக்கு முன்புதான் இங்கு வீடுகள் ஒப்படைக்கப்பட் டன. முதலில் ரூ.1.96 லட்சம் பங்களிப்புத் தொகையாகச் செலுத்தினோம். பின்னர் மின் இணைப்புக்கு தனியாக ரூ.6 ஆயிரம் வசூலிக் கப்பட்டது. ஆனால், வீடுகளில் இன்னும் முழு மையான மின் இணைப்பு வழங்கப்பட வில்லை. குறிப்பாக டி மற்றும் இ பிளாக்குகளில் அனைத்து வீடுகளுக்கும் சரிவர வயரிங் வேலை நடைபெறவில்லை. சில வீடுகளுக்கு மட்டுமே மீட்டர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள் ளன. மேலும், குடிநீர் இணைப்பு, கழிவறை வடிகால் ட்ரைனேஜ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட செய்து தரப்படவில்லை. கிட் டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வீடு கேட்டு விண்ணப்பித்தவர்கள் முதல், ஆறு மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்தவர்கள் வரை, பலருக்கு இங்கே வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தற்போது, பல ஆண்டு கள் காத்திருப்புக்குப் பின் கிடைத்த இந்த வீடுகளில், அடிப்படை வசதிகள் இல்லாமல் குடிபெயர முடியாமல் திண்டாடுகிறோம் என் றனர். மேலும் அவர்கள் கூறுகையில், இந்தச் சிக்கல் குறித்து, இரண்டு மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தோம். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் நேரடியாக இப்பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு சிறிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டது. சில பணி கள் தொடங்கப்பட்டன. பொது குடிநீர் தொட்டி ஒன்று கட்டப்பட்டது. ஆனால், வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படவில்லை. மின் இணைப்பும் முழுமை பெறவில்லை. ஏற்க னவே, பங்களிப்புத் தொகையைச் செலுத்த கடன் வாங்கியும், சேமிப்பை முழுவதுமாக செலவிட்டுள்ளோம். இந்நிலையில், பழைய இடத்திலும் வாடகை கொடுத்துக் வருகி றோம். ஒரே நேரத்தில் கடன் தவணை மற்றும் வாடகை என பெரும் சுமையாக உள்ளது. இத் தகைய சூழலில், கொடுக்கப்பட்ட குடியிருப் பில் குடியேற முடியாமல் உள்ளதாக வருத் தத்துடன் தெரிவித்தனர். இந்த திட்டம், அடித்தட்டு மக்களுக்கு நிரந் தர குடியிருப்பு வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. ஆனால், உள்கட்ட மைப்பு குறைபாடுகள், இத்திட்டத்தின் பல னைப் பெறுவதில் பெரிய தடையாக உள் ளன. மின் இணைப்பு, குடிநீர் உள்ளிட்ட அடிப் படைத் தேவைகள் ஏற்படுத்தாமல், கட்டுமா னப் பணிகள் மட்டுமே முடிக்கப்பட்ட வீடுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற் றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலை யிட்டு, செட்டிபாளையம் அடுக்குமாடி குடியி ருப்பு திட்டத்தில் மின் இணைப்பு, குடிநீர், வடிகால் போன்ற அனைத்து உட்கட்ட மைப்பு பணிகளையும் முழுமையாக செய்து, பயனாளிகள் அங்கு விரைவில் குடியேற வசதி செய்து தர வேண்டும் எனக் கோரு கின்றனர். இல்லையெனில், இந்த திட்டம், மக் களின் நம்பிக்கையை இழக்கச் செய்யும் ஒரு கற்பனைக் கோட்டையாக மட்டுமே மாறும் என்பதே அவர்களின் அச்சமாக உள்ளது. -(ந.நி)</p>
<p> </p>
