வெட்டி விளம்பரங்களைத் தவிர...என்ன செய்தார் வானதி சீனிவாசன்?
24 Mar 2026, 3:23 pm

வெட்டி விளம்பரங்களைத் தவிர...என்ன செய்தார் வானதி சீனிவாசன்?

2026 சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆயத்த வேலைகளில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு, பிரச்சாரம், வெற்றி வியூகம் என பணிகள் நீண்டுக் கொண்டே செல்கிறது. இது ஒருபுறம் இருக்க ஏற்கனவே 2021 இல் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் வெற்றிப் பெற்று சட்டப்பேரவை உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட அதிமுக, பாஜக சட்டப் பேரவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பது கேள்விக் குறியே.

இதில் குறிப்பிடத்தக்க தொகுதி கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி இது வரை கோவை மாவட்டத்தில் நேரடியாக பாஜக சட்டப்பேரவை உறுப்பினரை மக்கள் தேர்தெ டுக்கவே இல்லை. முதல் முறையாக அதிமுக தயவில் 2021 இல் போட்டியிட்டு வெற்றி பெற்ற வானதி சீனிவாசன் முதல் பாஜக சட்டப் பேரவை உறுப்பினரானார். கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதி யில் 2021ல் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2,44,922 ஆக இருந்தது. இதில் - 1,53,864. வாக்குகள் பதிவானது. இதில் வானதி (பாஜக) - 53,209 - 34.6% வெற்றி பெற்றார். கமலஹாசன் (மநீம) - 51,481 - 33.5% பெற்று இரண்டாம் இடத்திலும், மயூரா ஜெயக்குமார் (திமுக-கூட்டணி) - 42,383 - 27.5% (காங்கிரஸ் - திமுக கூட்டணி) மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். கோவை தெற்கு தொகுதியை பொறுத்தவரை கோவை மாவட் டத்தில் மையப்பகுதியாகவும், வியாபாரிகளும், அனைத்து சமூகத்தினரும் வசிக்கக் கூடிய தொகுதியாக உள்ளது. ஊடக வெளிச்சத்திற்காகவே... அதிமுகவின் வாக்குகளை பெற்று இது வரை வெற்றியே பெறாத பாஜக முதல் முறை யாக வெற்றி பெற்றது, மக்கள் நீதி மையம் போட்டியிட்டதாலும் குறிப்பாக கமலஹாசன் இங்கு போட்டியிட்டதால், மாவட்டத்தில் மக்கள் நீதி மையம் குறிப்பிடத்தகுந்த வாக்கு களை பெற்றது. இதன் காரணமாக திமுக கூட்டணி குறைந்த வாக்குகள் வித்தியாசத் தில் அனைத்து தொகுதிகளையும் இழந்தது. இதனிடையே வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினா லும், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் சட்டப்பேரவை உறுப்பினரை மக்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் தொகுதிக்கு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் என்ன செய் தார் என்ற கேள்விக்கு அவராலேயே பதில ளிக்க முடியாது என்பதே நிதர்சனம். ஒன்றி யத்தில் பாஜக மோடி அரசு இருப்பதால் தமிழ கத்திற்கு தேவையானதையும், கோவைக்கு தேவையானதையும் பெற்று கொடுப்பேன் என்று தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கிய வானதி வெற்றிக்குப் பின் தனது வெற்று விளம் பரத்திற்காகவும், பெரிய நிறுவனங்க ளின் சி.எஸ்.ஆர் நிதியை பெற்று தையல் இயந்திரங்களை, வாட்டர் ஏ.டி.எம் என தனது பங்கை எடுத்து கொண்டு ஊடகங்களுக்கு பேட்டி யளிப்பதை மட்டுமே வாடிக்கையாக வைத்துக் கொண்டார். கோவையில் இதயபகுதியாக இருக்கும் தெற்கு தொகுதியின் பிரதான பிரச்சனை போக்குவரத்து நெரிசல் தான். குறிப்பாக கோவை ரயில் நிலையம், டவுன்ஹால் பகுதி களில் கடும் போக்குவரத்து நெரி சல் ஏற்படும். ரயில் நிலைய விரிவாக் கம், தேசிய பஞ்சாலை கழகத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்ற நீண்ட நெடும் கோரிக்கைகளுக்கு கூட அவர் செவி கொடுக்கவும் இல்லை, தங்கள் கட்சி ஒன்றிய அமைச்சர்களை சந்திக்கும் போது வலியுறுத்தவும் இல்லை. அடுத்த தேர்தலில் சீட் வேண்டும், கோவை யில் கூடுதல் இடங்களை பாஜக கைப் பற்ற வேண்டும் என்ற சுயநல கோரிக்கைகளை மட்டுமே வைத்து செயல்பட்டதாக பார்க்க முடிகிறது. வாக்காளிக்காத மக்களுக்கும் ஆனால் திமுக அரசு கோவை தெற்கு தொகுதிக்கு சட்டப்பேரவை உறுப்பினராக வானதி கோரிக்கை வைக்காவிட்டாலும் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா, பெரியார் நூலகம் அறிவு சார் மையம், புதிய தார் சாலை, நேரு உள் விளையாட்டு அரங்கு மேம்பாடு என தொகுதி மக்களுக்கு தேவையா னதை அரசே கையில் எடுத்து செய்தது. ஏற் கனவே தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தது போல, திமுக வெற்றி பெறாத தொகுதிக்கும் நான் தான் முதல்வர் என கூறியதற்கு ஏற்ப அரசு மருத்துவமனை என தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளை தமிழக அரசு செய்துள்ளது. மேலும், சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக் கக்கூடிய கோட்டைமேடு, உக்கடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சட்டமன்ற உறுப்பினராக என்ன பிரச்சனை உள்ளது என கேட்க கூட வரவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையு டன் தெரிவிக்கின்றனர். ஒரே ஒரு முறை அங் கன்வாடி மையத்தை திறந்து வைக்க வந்தார். அதன் பிறகு அவரை தங்கள் பகுதிகளில் பார்க்கவே இல்லை என மக்கள் தெரிவித்த னர். ஒன்றியத்தின் டப்பா இன்ஜின் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செய லாளர் சி.பத்மநாபன் கூறிய தாவது, கோவையின் இத யம் போல் இருக்கக்கூடிய தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் சட்டமன்ற உறுப் பினராக தேர்வு செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கி றார். ஆனால் மாநில அரசை குறை சொல்வதை மட்டுமே அவரது பிரதான பணியாக வைத்தி ருப்பதை பார்க்க முடிகிறது. வேறு எந்த பணிகளையும் அவர் செய்ததாக செய்தித்தாள்களில் பார்க்க முடிய வில்லை. மேலும் இந்த ஐந்து ஆண்டு களில் தொகுதியிலோ அல்லது மாவட்டத்திலோ வளர்ச்சிப்பணிகள் குறித்து எதிலும் அவர் கவனம் செலுத்தவில்லை. அப்படி செய்த தாக எதையும் அவரால் கூறவும் முடியாது. தையல் இயந்திரம் கொடுப் பது, முத்ரா கடன் வழங்குவது ஆகிய வற்றையே பிரதான வேலையாக செய்து வருகிறார். முத்ரா கடன் என் பது ஏதோ ஒரு தொகுதிக்கு சட்ட மன்ற உறுப்பினர் கொடுப்பது அல்ல. இது நாடு முழுவதும் செயல்பாட்டில் உள்ளது தான். இதையெல்லாம் தனி யார் அமைப்புகளும் கூட வழங்கி வரு கிறது. 10 லட்சத்திற்கும் மேற்பட் டோர் இருக்கக்கூடிய இங்கு போக்கு வரத்து மிகவும் சவாலான விஷய மாக உள்ளது. தினசரி சுமார் 10,000 பேர் வந்து செல்லும் கோவை அரசு மருத்துவமனையை மேம்படுத்த ஏதாவது அரசிடம் கேட்டுள்ளாரா? மாநகரம் முழுவதும் தொழில் முனைவோர் என பலரை இவர் அறிந்திருந்த போதும் அவர்களின் உதவியை பெற்றாவது ஏழை மக்கள் பயன் படுத்தக்கூடிய ஏதாவது உதவியை செய்திருக் கிறாரா என்றால் இல்லை. சாலையோர வியா பாரிகள், காய்கறி வியாபாரிகள் யாருக்கும் எதையும் இவர் செய்யவில்லை. மாநில அரசு செம்மொழிப் பூங்காவை அமைத்தது அதுவும் உங்கள் தொகுதியில் தான் வருகிறது. அதற்கு நன்றியை அல்லது அதில் உள்ள தேவைகள் குறித்து பேசியது உண்டா? மேற்கு மாவட்டங்க ளிலேயே ஆகப்பெரிய அளவில் ஒரு நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது, என்றாவது நேரில் சென்று பார்த்துள்ளாரா. தேசிய பஞ்சாலைகள் மூடப்பட்டு ரூ.5 ஆயிரம் கோடி சொத்து இந்த மாநகரத்தில் வீணாகி கிடைக்கிறது. இதுவரை ஒன்றிய அமைச்சர்களை அடிக்கடி சந்திக்கும் இவர் என்றாவது இது குறித்து பேசி இருக்கி றாரா? சட்டமன்றத்தில் பேசினாலும் தமிழ்நாடு அரசை குறை சொல்வதும் வெளிநடப்பு செய்வ தும் தவிர வேற எதையும் அவர் செய்யவில்லை என்பதே நிதர்சனம், என்றார். உழைப்பாளி மக்கள் வெல்வார்கள் நேரடியாக தேர்தல் களத்திற்கு வரும் பாஜக வினரை தமிழகம் எப்போதுமே புறக்கணிக்கும் என்பதால், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று மக்களுக்கு என்ன தேவை என் பதை பற்றி சிந்திக்காத வானதி சீனிவாசன் தங்கள் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ கொள்கை களை ஏதாவது ஒரு வகையில் வேரூன்ற வைக்க வும், சுய விளம்பத்திற்கு தனியார் பங்களிப்பு டன் நலத்திட்டம் என்ற பெயரில் நாடகத்தை அர கேற்றுவதில் 5 ஆண்டுகளை வானதி சீனிவாசன் கழித்துள்ளார் என்பது நிதர்சனம். இனி வானதி ஸ்ரீனிவாசன் வடக்கு, தெற்கு என எந்த தொகுதியில் போட்டியிட்டா லும், கோவை மாநகர உழைப்பாளி மக்கள் தோல்வியையே பரிசாக அளிப்பார்கள் என்பது களம் சொல்லும் உண்மை.