தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாணவி அனு கீர்த்தனா மறைவு கல்லூரியில் மெழுகுவர்த்தி ஏந்தி இரங்கல்!

19 Jun 2026, 12:23 am
மாணவி அனு கீர்த்தனா மறைவு கல்லூரியில் மெழுகுவர்த்தி ஏந்தி இரங்கல்!

மாணவி அனு கீர்த்தனா மறைவு கல்லூரியில் மெழுகுவர்த்தி ஏந்தி இரங்கல்!

கோவை, ஜூன் 18– நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளால் மன உளைச் சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட மாணவி அனு கீர்த்தனாவுக்கு, மாணவர் சங்க கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிளை சார்பில் அஞ்சலி கூட்டம் நடை பெற்றது.

நீட் தேர்வு வினாத்தாள் குளறுபடி காரணமாக மருத்துவக் கனவோடு தேர்வெழுதிய பல மாணவர்கள் கடும் மன உளைச் சலுக்குள்ளாகினர்.

இந்நிலையில், கோவையை சேர்ந்த அனு கீர்த்தனா என்ற மாணவி நீட் மறு தேர்வு அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

அனுகீர்த்தனாவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இந்திய மாணவர் சங்க கோவை அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரி கிளை சார்பில் வகுப்பறைகளில் அஞ்சலிக் கூட்டம் வியாழனன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில், சங்க மாவட்டத் துணைத் தலைவர் ரங்கசாமி மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் நேதாஜி நகர் மாணவர் சங்க கிளை சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தும் அஞ்சலிக் கூட்டம் முன்னெடுக் கப்பட்டது.

புதன்கிழமை இரவு நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில், அமைப்பின் மாவட்டத் தலைவர் பாவெல், மாவட் டக் குழு உறுப்பினர்கள் பிரசாந்த், ஹேராம் மற்றும் கிளை உறுப்பினர் மகேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு உயிரிழந்த மாணவிக்கு தங்களது அஞ்சலியைச் செலுத்தி னர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.