தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழிலாளர் விரோத ஒன்றிய பாஜக அரசு

8 Dec 2025, 4:39 pm
தொழிலாளர் விரோத ஒன்றிய பாஜக அரசு
<p><strong>தொழிலாளர் விரோத ஒன்றிய பாஜக அரசு</strong></p> <p>தருமபுரி, டிச. 8 &ndash; &nbsp;தொழிலாளர்களின் உரிமைகளைப் &nbsp;பறிக்கும் புதிய சட்டத்தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தி, இடதுசாரி &nbsp;கட்சிகள் மற்றும் விசிக இணைந்து தமிழ கம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றது. &nbsp;தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் &nbsp;முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் இரா.சிசு பாலன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் &nbsp;மாவட்டச் செயலாளர் எஸ்.கலைச் செல் வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் &nbsp;மாவட்டச் செயலாளர்கள் தருமபுரி மையம் த.கு.பான்டியன், அரூர் சாக்கன் &nbsp;சர்மா, பென்னாகரம் கருப்பண்ணன் ஆகியோர் தலைமை ஏற்றனர். இதில், சிபிஐ (எம் எல்) மாவட்டச் செயலாளர் &nbsp;கெ. கோவிந்தராஜ் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர். இதில், சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் பேசுகையில், இந் தியாவுக்கு என்று தனியே கடவுளோ, &nbsp;மதமோ இல்லை என்றும், பிரதமராலும் &nbsp;அதைச் சொல்ல முடியாது என்றும் டாக்டர் அம்பேத்கர் அரசியல் சாசனத் தை வடிவமைத்துள்ளார். இந்த சாச னம் தான் பாஜகவுக்கு உறுத்துகிறது. திருப்பரங்குன்றத்தில் சட்டத்தை மீறி, &nbsp;மதத்தை வைத்து நீதிபதி தீர்ப்பளித் திருக்கிறார். சட்டத்தின் தலையில் நீதி பதி அமர முடியாது. அடிக்கடி சட்ட மன்றத்தின் தலையில் ஆளுநர் ஏறி அமர &nbsp;முயற்சி செய்தால், அவர் கீழே விழுந்து காயம் அடைவார். உச்ச நீதி மன்ற நீதிபதி கூட, அரசியலமைப்பின் படி &lsquo;மக்களின் பணியாளர்&rsquo; தான். ஆனால், இந்த அரசியல் சாசனத்தைத் திருத்த வேண்டும் என்றும், அதில் உள்ள &lsquo;சோசலிசம்&rsquo; மற்றும் &lsquo;மதச்சார் பின்மை&rsquo; ஆகிய சொற்களை நீக்க &nbsp;வேண்டும் என்றும் பாஜக முயல்கிறது. &nbsp;அரசியல் சட்டத்திற்காக தமிழக முதல் வர் போராடுகிறார். நாங்கள் உங்க பக் கத்தில் இருக்கிறோம். அதேநேரத்தில், தமிழ்நாட்டில் உழைக்கிற மக்க ளின் போராட்டங்களை தமிழ்நாடு முதல மைச்சர் ஆதரிக்க வேண்டும்என தோழ மையோடு கேட்டுக் கொள்கிறோம் என்றார். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பி னர் செ.முத்துக்கண்ணன் பேசுகையில், &nbsp; &ldquo;8 மணிநேரம் வேலை, 8 மணிநேரம் &nbsp;உறக்கம், 8 மணிநேரம் குடும்பம் மற்றும் &nbsp;சொந்த வேலைக்கு&rdquo; என்ற கோரிக்கை &nbsp;1816ஆம் ஆண்டு உருவானது. சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டத்தால் 1930களில் இக்கோரிக்கை முதன் முதலில் வென்றெடுக்கப்பட்டது. 1866 ஆம் ஆண்டு மார்க்ஸ் உருவாக்கிய சர் வதேச தொழிலாளர் அறிக்கையில் இக் கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டது. ரஷ்ய புரட்சிக்குப் பிறகு 1917ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது. இந்தியா வில் சுதந்திரப் போராட்டத்தின்போதே தொழிலாளர் நலனுக்கான போராட் டங்கள் நடந்தன. 1923ஆம் ஆண்டு தொழிலாளர் இழப்பீடு சட்டம் உரு வாக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு முன்பு, &nbsp;1948க்குள் தொழிலாளர் நலச்சட்டம், தொழிலாளர் துறை சட்டம் என மிக வும் முக்கியமான மூன்று சட்டங்கள் இயற்றப்பட்டன. பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகி யோர் 1931ஆம் ஆண்டு தூக்கிலிடப் பட்டதற்கு, இந்திய மக்களின் பாது காப்பு மற்றும் தொழிலாளர் நலனுக்கு &nbsp;எதிராக பிரிட்டிஷ் அரசு நாடாளுமன்றத் தில் சட்டம் இயற்றியபோது, அதனைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் மீது வெடிகுண்டு வீசியதுதான் காரணம். &nbsp;இப்படிப் போராடிப் பெற்ற 44 தொழி லாளர் நலச் சட்டங்களில் 29 சட்டங்க ளைத் தொகுத்து 4 சட்டத் தொகுப்புக ளாக மத்திய பாஜக அரசு மாற்றியுள் ளது. இதனை எதிர்த்துப் போராடி முறி யடிப்போம். தொழிலாளர் நலச் சட்டங் களைப் பாதுகாப்போம் என்றார். திருப்பூர் திருப்பூர் தீரன் சின்னமலை வடக்கு &nbsp;பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட் டச் செயலாளர் செந்தில் குமார் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் &nbsp;எம்.ரவி, சிபிஐ (எம் &nbsp;எல்) மாவட்டச் செயலாளர் கே.முத்து கிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வெ.கனியமுதன் ஆகியோர் &nbsp;கண்டன உரையாற்றினர். முன்னதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். காளியப்பன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி. &nbsp;மூர்த்தி உள்பட தலைவர்கள் பங்கேற்ற னர். இதில் மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனி னிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி &nbsp;ஆகியவற்றின் ஊழியர்கள் திரளா னோர் கலந்து கொண்டனர். முடிவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் மூர்த்தி நன்றி கூறி னார். கோவை கோவை டாடாபாத் பகுதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையேற்றார். இதில், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், சிபிஐ தேசிய கட்டுப்பாட்டு &nbsp;குழு உறுப்பினர் ஆர்.முத்தரசன், &nbsp;சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.பத்ம நாபன், சிபிஐ மாவட்டச்செயலாளர் சி. சிவசாமி, சிபிஐ(எம்எல்)மாவட்டச் செய லாளர் பாலசுப்பிரமணியம், மாநிலக் குழு உறுப்பினர் பெரோஸ் பாபு, விசிக வடக்கு மாவட்ட நிர்வாகி கோவை குரு &nbsp;உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முடிவில், சிபிஐ மாவட்ட நிர்வாகி தங்க வேல் நன்றி கூறினார். ஈரோடு ஈரோடு காளைமாட்டு சிலை அரு கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.டி.பிரபாகரன் தலை மை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு உறுப் பினர் இ.முத்துக்குமார் தொடக்க உரை யாற்றினார். சிபிஐ மாநிலப்பொருளா ளர் எம்.ஆறுமுகம், சிபிஐ (எம்எல்) மாவட்ட அமைப்பாளர் ஜெ.பி.கார்த்தி கேயன், விசிக மாநிலச்செயலாளர் அ.ர. அப்துல் ரகுமான் ஆகியோர் கண் டன உரையாற்றினர். இதில், சிபிஎம் &nbsp;மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மூத்த தலைவர் கே.துரைராஜ் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முடி வில், சிபிஐ (எம்எல்) ஊத்துக்குளி பி. முத்துசாமி நன்றி கூறினார். &nbsp;நீலகிரி நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி &nbsp;திடல் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிபிஎம் மாவட்டச்செயலாளர் வி. ஏ.பாஸ்கரன் தலைமை ஏற்றார். இதில் சிபிஐஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ். ராஜேந்திரன், சிபிஐ மாவட்டச் செயலா ளர் போஜராஜ், விசிக மாவட்டச் செயலா ளர் புவனேஸ்வரன், விசிக மண்டல செயலாளர் சுசி கலையரசன் உள்ளிட் டோர் உரையாற்றினர். முடிவில், சிபிஐ மாவட்டப்பொருளாளர் இப்ராகிம் நன்றி கூறினார். இதேபோன்று, கோத்த கிரி மற்றும் கூடலூர் பகுதிகளில் ஞாயி றன்று நடைபெற்ற இடதுசாரி கட்சி கள் மற்றும் விசிக இணைந்து நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். சேலம் &nbsp;சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ. மோகன் சிபிஎம் மாவட்ட அமைப்புக்குழு உறுப் பினர் ஏ.முருகேசன், விடுதலை &nbsp;சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்டச் செயலாளர் ஐ . காஜாமைதீன் சிபிஐ (எம்எல்) மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன் தலைமை ஏற்றனர். &nbsp;இதில், சிபிஎம் மாநில குழு உறுப்பி னர் கே.ஆறுமுக நயினார், சிபிஐ மாநில &nbsp;நிர்வாகக் குழு உறுப்பினர் கே.எம்.இஷாக், விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் மாநில அமைப்புச்செயலாளர் பெ. &nbsp;தமிழினியன், சிபிஐஎம் எம்எல் மத்திய கமிட்டி உறுப்பினர் எ. சந்திரமோகன் உள்ளிட்டோர் உரையாற்றினர். நாமக்கல் நாமக்கல் பூங்கா சாலையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் மாவட்டச்செயலாளர் எஸ்.கந்தசாமி, &nbsp;சிபிஐ மாவட்டச்செயலாளர் அன்புமணி, &nbsp;விசிக மைய மாவட்டச் செயலாளர் நீல &nbsp;வானத்து நிலவன் ஆகியோர் தலைமை &nbsp;ஏற்றனர். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில &nbsp;குழு உறுப்பினர் கே.காமராஜ், சிபிஐ &nbsp;தேசியக்குழு உறுப்பினர் மரு.ஜி.ஆர். ரவிந்திரநாத், விசிக செய்தி தொடர்பா ளர் கு.க.பாவலன் ஆகியோர் கண்டன &nbsp;உரையாற்றினார். இதில், சிபிஎம், சிபிஐ, &nbsp;சிபிஐ(எம்எல்) மற்றும் விசிகாவினர் திர ளானோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.