தலித் இளைஞர் மீது தாக்குதல் நடவடிக்கை எடுக்கத் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்
24 Feb 2026, 3:55 pm
<p><strong>தலித் இளைஞர் மீது தாக்குதல் நடவடிக்கை எடுக்கத் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்</strong></p>
<p>செங்கல்பட்டு, பிப். 24: தலித் இளைஞரைக் காரில் கடத்திச் சென்று ஜாதிய வன்மத்துடன் கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலி யுறுத்தியுள்ளது. செய்யூர் வட்டம் பனையூர் கிராமத்தைச் சேர்ந்த கிரி (17), செய்யூர் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரு கிறார். கடந்த 20-ஆம் தேதி இரவு பணி முடிந்து திரும்புகையில், இடைக்கழிநாடு பேரூராட்சி மன்றத் துணைத் தலைவரும் பாமக நிர்வாகி யுமான கோபி தலைமையிலான கும்பல் இவரைக் கடத்திச் சென்று, பாமக பேனரை கிழித்ததாக ஒப்புக்கொள்ளச் சொல்லி கடுமையாகத் தாக்கியுள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கிரியை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலா ளர் அ. ராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இது குறித்து ராமலிங்கம் கூறுகையில், “ஜாதிய வன்மத்துடன் தாக்குதல் நடத்திய கோபி மற்றும் கும்பலை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத் திற்குப் பாதுகாப்பும், சட்ட ரீதியான நிவார ணமும் வழங்க மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.</p>
