உலகைச் சுற்றி ‘ராஜாக்கள் வேண்டாம்’
3 Nov 2026, 10:41 pm

உலகைச் சுற்றி

‘ராஜாக்கள் வேண்டாம்’

டிரம்ப்பினால் புறக்கணிக்க முடியாத ஒரு செய்தியை, அக்டோபர் 24-இல் நியூயார்க் மாநக

ரில் பெருமளவில் தெருக்களில் கூடி, ‘ராஜாக்கள் வேண்டாம்’ என முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் உணர்த்தினர். இதனால் மாநகரமே முடங்கியது. நியூயார்க்

மாநகரம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் 2,500-க்கும்மேற்பட்ட இடங்களில் ‘ராஜாக்கள் வேண்டாம்’ என்ற போராட்டங்கள் நடைபெற்றதாக ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் குறிப்பிடுகிறது. நான்காவது முறையாக இத்தகைய போராட்டங்கள் நடைபெற்ற தருணம் இதுவாகும்.

போராடி, போராடி மக்களே சலிப்படைந்து போராட்டங்களைக் கைவிட்டு விடுவார்கள் என்ற டிரம்ப்பின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. லட்சக்கணக்கான சாமானிய மக்கள் தெருக்களில் கூடி, “அமெரிக்காவிற்கு ராஜாக்கள் வேண்டாம்; ஜனநாயகம் வேண்டும்”எனப் போராடி வருகின்றனர். அமெரிக்கா, அமெரிக்க மக்களுக்கே சொந்தம் எனப் பாரறிய பறைசாற்றி வருகிறார்கள்.