முந்தய பக்கம்

அரசு கல்லூரியில் புகையிலைப் பொருட்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்

3 Jan 2026, 4:57 pm
அரசு கல்லூரியில்  புகையிலைப் பொருட்கள்  எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்
<p><strong>அரசு கல்லூரியில் &nbsp;புகையிலைப் பொருட்கள் &nbsp;எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்</strong></p> <p>அறந்தாங்கி, ஜன.3- &nbsp;புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் &nbsp;போதைப் பொருள் எதிர்ப்புக் குழுவின் சார்பில், புகையிலைப் பொருட்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம், கல்லூரி திருவள்ளுவர் அரங்கத்தில் நடைபெற்றது. &nbsp;முகாமிற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் ம. துரை தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புகையிலை தடுப்புப் பிரிவின் உளவியல் ஆலோசகர் வே.அறிவமுதன், புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பல்வேறு தீமைகளை மாணவர்களுக்குச் சான்றுகளுடன் சுட்டிக்காட்டி, புகையில்லா வாழ்க்கையின் சிறப்பை எடுத்துரைத்தார். முன்னதாக, கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மு. பழனித்துரை &nbsp; வரவேற்றார். கல்லூரி கணினி அறிவியல் துறை பேராசிரியரும், கல்லூரி போதைப்பொருள் எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான முனைவர் த.செந்தில்குமார் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram