முந்தய பக்கம்

பயங்கரவாத எதிர்ப்பு நாள் போராட்டம்

6 Dec 2025, 2:48 pm
பயங்கரவாத எதிர்ப்பு நாள் போராட்டம்
<p><strong>பயங்கரவாத எதிர்ப்பு நாள் போராட்டம்</strong></p> <p>தருமபுரி, டிச.6- பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிச.6 ஆம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு &nbsp;நாளாக அறிவித்து, தமிழ்நாடு முஸ் லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. ஜனநாயக படுகொலைக்கு வழி வகுக்கும் அவசரமான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை கைவிட வேண்டும். வஃக்பு திருத்த சட்டம் - 2025 என்ற வழிப்பறிக் கொள்கை திட்டத்தை திரும்பப்பெற வேண்டும். வழி பாட்டு தலங்கள் சிறப்பு விதிகள் சட் டம் 1991யை முழுமையாக நடை முறைப்படுத்த வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி பிஎஸ்என்எல் அலுவ லகம் முன்பு சனியன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் &nbsp;மாவட்டத் தலைவர் என்.சுபேதார் &nbsp;தலைமை வகித்தார். இதில் மாநிலப் பொருளாளர் சி.கே.சனாவுல்லா, &nbsp;கிழக்கு மாவட்ட திமுக முன்னாள் &nbsp;பொறுப்பாளர் தடங்கம் பெ.சுப்பிர மணி, சிபிஎம் மாநிலக்குழு உறுப் பினர் ஏ.குமார், திராடவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. ஜெயராமன், விசிக மேலிட பொறுப் பாளர் பொ.மு.நந்தன், ஐயுஎம்எல் மாவட்டத் தலைவர் எஸ்.அன்வர் பாஷா, மனிதநேய மக்கள் கட்சி &nbsp;மாவட்டச் செயலாளர் ஏ.நியாஸ் உட்பட திரளானோர் கலந்து கொண் டனர். கோவை கோவை மாவட்டம், உக்கடம் &nbsp;வள்ளியம்மை பேக்கரி முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமுமுக மாவட்டத் தலைவர் சர்புதீன் தலைமை தாங்கினார். இதில், மனித நேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் பழனி ஃபாருக், விசிக மாநில துணைப் பொதுச்செயலா ளர் சுசி கலையரசன், திராவிடர் தமி ழர் கட்சி மாநிலத் தலைவர் வெண் மணி ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram