முந்தய பக்கம்

மதவெறி எதிர்ப்பு இலக்கிய அமர்வு

2 Feb 2026, 4:51 pm
மதவெறி எதிர்ப்பு இலக்கிய அமர்வு
<p><strong>மதவெறி எதிர்ப்பு இலக்கிய அமர்வு</strong></p> <p>உடுமலை, பிப்.2- உடுமலையில், தமுஎகச சார்பில் மதவெறி எதிர்ப்பு இலக்கிய அமர்வு நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் உடுமலை கிளை சார்பில், ஞாயிறன்று அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் &lsquo;மதவெறி எதிர்ப்பு இலக்கிய அமர்வு&rsquo; நடைபெற்றது. சங்கத்தின் கிளைத் தலைவர் சுதா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், மக்களை சாதி மற்றும் மத ரீதியாக பிரிக்கும் நடவடிக்கையை எதிர்க்கும் வகையில், மக்களிடம் பிரச்சாரம் செய்வது என்றும், அதை மக்கள் எளிமையாக தெரித்து கொள்ளும் வகையில் பாடல்கள், நாடக வடிவில் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, சங்கத்தின் ஒன்றுபட்ட கோவை மாவட்ட முன்னாள் துணைத்தலைவர் சுபாஷ் சிறப்புரையாற்றினார். படைப்புகள், பாடல்கள், கருத்து பரிமாற்றங்கள் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் இளைய பாரதி இயக்கத்தில் தயாரான குறும்படங்கள் திரையிடப்பட்டன. இந்நிகழ்ச்சியில், சங்கத்தின் மாவட்ட உதவிச்செயலாளர் தோழன்ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேவயானி, கிளைச் செயலாளர் துரையாரசன், மடத்துக்குளம் செயலாளர் ராஜரத்தினம், பொருளாளர் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram