போதை ஒழிப்பு இளைஞர் எழுச்சி மாரத்தான்
2 Nov 2026, 12:02 am

போதை ஒழிப்பு இளைஞர் எழுச்சி மாரத்தான்

சென்னை, நவ. 1-போதை ஒழிப்பு இளைஞர் எழுச்சி மாரத்தான் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புசார்பில் பெசன்ட் நகரில் நடைபெற்றது.தமிழ்நாடு அரசின் ஊரக மற்றும் உள்ளாட்சி துறை மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், தொழிலதிபர்ஐசரி கே.கணேஷ் ஆகியோர் இணைந்து துவக்கிவைத்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் ஜெ.சி.டி.பிரபாகர் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

இதுகுறித்து மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறுகையில், அண்மைக்கால கலாச்சார மாற்றங்கள் பெரும் கேட்டினை விளைவிக்கும் புது கலாச்சார இளம் இளைஞர்களை போதை பொருட்களுக்குஅடிமையாக்கி வளர்ச்சிப்பாதைகளை சீரழித்து வருகிறது. இது மிகப்பெரும்எதிர்கால சீரழிவிற்கு வழிவகுத்துவருவது நிதர்சனமாக தெரிகிறது.

இதை தடுத்து நிறுத்தும் நோக்கோடு, தமிழக இளைஞர்களை நேர்வழிப்படுத்தி, போதையை ஒழித்து அவர்களை வணிக வளர்ச்சிக்கு மட்டுமல்லாது வாழ்வின் வளர்ச்சிக்கு நல்வழிப்படுத்தவும் ஆண்டு

தோறும் போதை ஒழிப்பு மாரத்தான் பேரமைப்பின் இளைஞரணி சார்பில் நடத்தி வருகிறோம்.போதை ஒழிப்பை பேரமைப்பு முன்னிலைப் படுத்துவதோடு, அரசோடுதுணை நின்று, தமிழகத்தில் போதை கலாச்சாரத்தை முழுமையாக துடைத்தெறிய பேரமைப்பு முனைந்து செயலாற்றி வருகிறது என்று கூறினார்.

இதில் நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி, ஜெ.சி.டி. பிரபாகர் மகள் ஆதிரா நேவிஸ் பிரபாகர், பேரமைப்பின் இளைஞர் அணி சென்னை மாநகர அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரதாப் ராஜா,பேரமைப்பின் மாநிலப் பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா, தலைமைச் செயலாளர் பேராசிரியர் ஆர்.ராஜ்குமார்,செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட ஏராமானோர் கலந்து கொண்டனர்.