முந்தய பக்கம்

“போதை இல்லா தமிழகத்தை நோக்கி’’ விழிப்புணர்வு பேரணி

3 Oct 2026, 12:04 am
“போதை இல்லா தமிழகத்தை நோக்கி’’  விழிப்புணர்வு பேரணி
<p><strong>“போதை இல்லா தமிழகத்தை நோக்கி’’ விழிப்புணர்வு பேரணி</strong></p><p>மயிலாடுதுறை, அக். 2- மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் த.பே.மா.லு கல்லூரி வணிகவியல் துறை மாணவர் அமைப்பு சார்பில் “போதை இல்லா தமிழகத்தைநோக்கி’’ என்கிற முழக்கத்தோடு போதை பழக்கத்திற்கெதிரான விழிப்புணர்வு பேரணி வணிகவியல்துறை தலைவர் முனைவர்.சேவியர் செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக, கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தரங்கம்பாடி வட்டாட்சியர் ராகவன் போதைப்பொருள்பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், போதைப் பழக்கத்தால் பல்வேறு சமூக சீரழிவு குறித்தும் உரையாற்றிகொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். கல்லூரியிலிருந்து அரண்மனைத்தெரு, கல்லூரி சாலை, பழையபேருந்து நிலையம் வழியாக, “போதைப் பொருள் தவிர்ப்போம், வளமான எதிர்காலம் அமைப்போம், போதைப்பொருள் ஒழிப்போம் மனித வளம் காப்போம்’’ போன்ற முழக்கங்களை எழுப்பியவாறு, விழிப்புணர்வுபதாகைகளை ஏந்தி, துண்டு பிரசுரங்களை விநியோகித்துச் சென்றனர். பொறையார் புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்த இப்பேரணியில், கல்லூரி முதல்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், தேசிய மாணவர்படை மாணவர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram