போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
15 Jul 2026, 10:39 pm
<p><strong>போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி</strong></p><p>குலசேகரம், ஜூலை 15 - சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டம், குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்து வக் கல்லூரி சார்பில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடை பெற்றது. கல்லூரி வளாகத்திலிருந்து அரசு மூடு சந்திப்பு வரை நடைபெற்ற மாணவ - மாணவியர்கள் பங்கேற்ற பேரணியை குலசேகரம் காவல் நிலைய சார்பு ஆய்வா ளர் சரவணகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் என்.வி. சுகதன், கல்லூரி அறக் கட்டளை உறுப்பினர் எம்.சி. பவ்யா, துறைத் தலைவர்கள் பங்கேற்றனர். இறுதியில் அரச மூடு சந்திப்பில் பொது மக்கள் முன்னிலையில் மாணவ - மாணவி யர்கள் போதையினால் ஏற்படும் பாதிப்பு கள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி கள் நடத்தினர்.</p>
