திருச்சி விரைவு செய்திகள்
4 Jul 2026, 9:30 pm

லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனை இராமநாதபுரத்தில் கணக்கில் வராத ரூ.3.66 லட்சம் பறிமுதல்

இராமநாதபுரம், ஜூலை 4- இராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்கா ணிப்புப் பிரிவு அதிகாரிகள், வெள்ளிக்கிழமை இராமநாத புரம் நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில், கணக்கில் வராத ரூ.3.66 லட்சம் ரொக்கப் பணம் அலுவலக வளாகத்தில் இருந்து கைப் பற்றப்பட்டது. மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப் பட்டபோது, வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் என்ப வரின் வங்கிக் கணக்கில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான சந்தேகத்திற்குரிய பரி வர்த்தனைகள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டது.

இராஜபாளையத்தில் ரூ.6,000 பறிமுதல்

இராஜபாளையம் நகராட்சி அலுவலகத்திலும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், நகரமைப்பு அலுவலகத்தில் பணியாற்றும் நகரமைப்பு ஆய்வாளர் காளீஸ்வரியிடம் இருந்து ரூ.2,000 ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. அந்தப் பணத்திற்கான முறை யான கணக்கு இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும், அலுவலகத்தில் இருந்த ஓய்வு பெற்ற அலு வலக உதவியாளர் பாண்டியனிடம் விசாரணை நடத்திய போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த தாக கூறப்படுகிறது. இதையடுத்து நடத்தப்பட்ட சோத னையில், அவரிடமிருந்து ரூ.4,000 ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. இந்தப் பணத்திற்கும் முறையான கணக்கு இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல், வருவாய்த் துறையிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு பணியாற்றிய ஊழி யர்கள் தங்களிடம் இருந்த பணத்திற்கான உரிய கணக்கு களை சமர்ப்பித்ததால், அந்தப் பணம் அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்பட்டது. சோதனையின் முடிவில், நகரமைப்பு அலுவல கத்தில் கணக்கில் வராத ரூ.6,000 ரொக்கப் பணம் மற்றும் சில முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி கள் பறிமுதல் செய்து, மேலதிக விசாரணைக்காக எடுத்துச் சென்றனர்.

ரூ.15 லட்சம் பரிவர்த்தனையில் அனுப்பியது கண்டுபிடிப்பு

சிவகங்கை லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர்கள் கண் ணன், ஜேசுதாஸ் தலைமையிலான போலீசார் காரைக் குடி மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர். இந்தச் சோதனை இரவு வரை நீடித்தது. சோதனையின்போது, கணக்கில் வராத ரூ.32 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மாந கராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஜி-பே பணப் பரிவர்த்தனை விபரங்களையும் போலீசார் ஆய்வு செய்த னர். அதில், மாநகராட்சியின் 10 ஒப்பந்ததாரர்கள் மூலம் வரைவாளர் மணிகண்டன், கணக்காளர் ஹரிஹரன் மற்றும் உதவியாளர் முத்துமாரி ஆகியோரின் வங்கிக் கணக்குகளுக்கு ஜி-பே வாயிலாக மொத்தம் ரூ.15 லட்சத்து 74 ஆயிரம் அனுப்பப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்தப் பரிவர்த்தனைகள் தொடர்பாகவும், கைப்பற் றப்பட்ட கணக்கில் வராத பணத்தின் ஆதாரம் குறித்தும் சிவகங்கை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடல் தானம் செய்த முன்னாள் ராணுவ வீரர் சிவகங்கை,

ஜூலை 4- சிவகங்கை மாவட்டம் கொட்டக்குடியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பஞ்சவர்ணம் (78) மறைவுக்கு பின்னர், அவரது விருப்பத்தின்படி அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானமாக வழங்கப் பட்டது. மருத்துவக் கல்லூரியின் முதலாமாண்டு மாண வர்களின் உடற்கூறியல் கல்விக்கு உதவும் வகையில், அவரது மனைவியும் குடும்பத்தினரும் வெள்ளிக்கிழமை உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கினர். இந்த மனிதநேயச் செயலைப் பாராட்டி, மருத்துவக் கல்லூரி முதல்வர் அவரது குடும்பத்தினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். நிகழ்ச்சியில் துணை முதல்வர், நிலைய மருத்துவ அலு வலர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கஞ்சா: ஒருவர் மீது வழக்கு

திருவில்லிபுத்தூர், ஜூலை 4- வத்திராயிருப்பு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேலப்பாளையம் ஊரணிக்கரை களத்துமேடு பகுதியில் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததாக ஒருவரை போலீ சார் கைது செய்து, அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். வத்திராயிருப்பு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மேலப்பாளையம் தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவர் சந்தேகத்திற்கிட மான முறையில் நின்று கொண்டிருந்தார். அவரை சோதனை செய்து விசாரணை நடத்தியபோது, விற்பனைக் காக 25 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து 25 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழில் வர்த்தக சங்கம் பாராட்டு விழா

இராஜபாளையம், ஜூலை 4- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில், தொழில் வர்த்தக சங்கம் சார்பில் தமிழ்நாடு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தொழில் வர்த்தக சங்கக் கட்டிடத்தில் நடைபெற்ற விழாவிற்கு சங்கத் தலைவர் பி.ஆர். வெங்கட் ராமராஜா தலைமை வகித்தார். துணைத் தலைவர் பத்மநாபன் வர வேற்றுப் பேசினார். செயலாளர் எம்.சி.வெங்கடேஸ்வர ராஜா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.

லாட்டரி விற்றவர் கைது

தேனி, ஜூலை 4- பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தத் தில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த நபரை தென்கரை காவல்துறையினர் கைது செய்தனர். பெரியகுளம் தென்கரை காவல்நிலைய சார்பு ஆய்வா ளர் செல்வராஜ், லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தம் பகுதி யில் ரோந்து சென்ற பொது சருத்துப்பட்டியைச் சேர்ந்த செவித்திவீரன் மகன் சிவபெருமாள் (49)என்பவர் லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து 52 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

பெரியகுளத்தில் தனியார் விடுதியில் வியாபாரி பணம் திருட்டு

தேனி, ஜூலை 4- பெரியகுளத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியி ருந்த வியாபாரியின் பணம் திருடு போனதாக தென்கரை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானல் அருகே பூண்டியைச் சேர்ந்தவர் சதாசிவம் மகன் தாமோதரன். இவர் வெள்ளப்பூண்டு வியாபாரம் செய்து வருகிறார். வடுகபட்டியில் வியாபாரி யிடம் வெள்ளைப்பூண்டை விற்று விட்டு ரூ 1.90 லட்சத்து டன் வைகை அணை சாலையில் உள்ள ராஜேந்திரா விடுதி யில் தங்கியுள்ளார். அறையை பூட்டிவிட்டு வெளியே சென்று சாப்பிட்டு அறைக்கு திரும்பிய போது பணத்தை காணவில்லை. இதுகுறித்து தென்கரை காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் வேல்மணி கண்டன் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வரு கிறார்.

இளம்பெண்ணுக்கு கத்தி முனையில் பாலியல் தொல்லை 17 வயது சிறுவர்கள் இருவர் கைது

இராஜபாளையம், ஜூலை 4- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே இளம்பெண்ணை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக 17 வயதுடைய இரண்டு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். இராஜபாளையம் அருகே பட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசனின் மனைவி அனிதா (23). முரு கேசன் டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பணிக்குச் செல்லும்போது தனது சீருடையை எடுத்துச் செல்ல மறந்துவிட்டதால், அனிதா இருசக்கர வாகனத்தில் தேசிகாபுரம் சென்று கணவருக்கு உணவு மற்றும் சீரு டையை வழங்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சிதம்பராபுரம் சுடுகாடு அருகே வந்த போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த 17 வயது டைய இரண்டு சிறுவர்கள் அனிதாவை வழிமறித்து, கத்தி யை காட்டி மிரட்டி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த தாக கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து தப்பித்து வந்த அனிதா, இதுகுறித்து தளவாய்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், சார்பு ஆய்வாளர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து, தெற்கு வெங்காநல்லூர் கிரா மத்தைச் சேர்ந்த 17 வயதுடைய இரண்டு சிறுவர்களை கைது செய்தார். பின்னர், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

கவனிக்க முடியவில்லை என்ற விரக்தியில் மனைவியை கொலை செய்த கணவர்

தேனி, ஜூலை 4- உடல்நிலை பாதிக்கப்பட்ட மனைவியை கவனிக்க முடியாத நிலையில் மனைவியை கொலை செய்த முதிய வர் தென்கரை காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி பேரூ ராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டு பகுதியில் வசித்து வருபவர்கள் கோவிந்தராஜ் (62), அமுதா (60) தம்பதி யினர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லாத நிலையில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக மனைவி அமுதா பாத்ரூமில் வழுக்கி கீழே விழுந்ததில் கால் பாதிப்புக்குள் ளாகி சரிவர நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முதியவர் கோவிந்தராஜ் வியாபாரம் செய்ய முடியாத நிலையில் மனைவிக்கு உரிய சிகிச்சை கொடுத்து அவரை கவனிக்க முடியாத நிலையும் இருந்துள்ளது. இந்த நிலையில் சனிக்கிழமை முதியவர் கோவிந்தராஜ் மனைவி அமுதாவின் தலையில் சுத்தியலால் தாக்கியது டன், கிரைண்டர் கல்லை தலையில் போட்டு கொலை செய்துள்ளார். அதன் பின்பு அவர் பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். இச்சம்பவம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

வண்டல் மண் கொள்ளையை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்

சாத்தூர், ஜூலை 4- சாத்தூர் அருகே கண்மாயில் விதிமுறை களை மீறி வண்டல் மண் எடுப்பதை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர். சாத்தூர் அருகேயுள்ளது சத்திரப்பட்டி. இங்குள்ள கண்மாயில் தேசிய நெடுஞ் சாலை துறை மேம்பால பணி களுக்காக வண்டல் மண் எடுக்க அனுமதி பெறப்பட் டது. இதையடுத்து ராட்சத இயந்திரங்கள் மூலம் மண் அள்ளும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் விதி முறைகளை மீறி அனு மதிக்கப்பட்ட அளவை விட அளவுக்கு அதிகமாக வண்டல் மண் எடுக்கப்பட் டது. மேலும் வெட்டி எடுக் கப்பட்ட வண்டல் மண்ணை, சாலைப் பணிக்கு பயன்படுத் தாமல் தனியாருக்கு விற் பனை செய்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, ஆவேசம டைந்த சத்திரப்பட்டிப் பொது மக்கள் மண் அள்ளும் பணி யை தடுத்து நிறுத்தினர். மேலும், விதிமுறைகளை மீறி மண் எடுப்பதால் கண் மாயில் தண்ணீர் தேங்காது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும். எனவே, மண் அள்ளுவதற்கான உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.