சாதீய வன்மத்திற்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் மத்திய சென்னையில் முன்முயற்சி
20 Aug 2026, 12:47 am

சாதீய வன்மத்திற்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் மத்திய சென்னையில் முன்முயற்சி

சென்னை, ஆக. 17-சிவப்பு பறவைகள் நாங்கள் ... என்ற கம்பீர இசைக் குரல் எழும்பூர் சூளை தட்டான் குளம் பகுதியை அதிர வைத்தது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலித் பெண்கள் உரிமை மாநாட்டுக்கு முன்னோட்டமாக மத்திய சென்னை மாவட்டத்தில் திங்களன்று (ஆக. 17) நடைபெற்றது.

ஒரு கோடி கையெழுத்து தொடக்க நிகழ்ச்சியில் ஒடுக்கப்பட்ட மக்களது விடுதலை மூச்சுக்கான கீதத்தை கொண்டாட்ட முழக்கமாக்கிய கங்கு கலைக்குழுவினரின் பாடல்கள், உலகப் புகழ் பெற்ற பாப் மார்லியின் 'கெட் அப், ஸ்டாண்ட் அப்' (எழுந்து நில், துணிந்து நில்) இசை வரிகளின் வாரிசு நாங்கள் என்று அறச்சீற்றப் பேரிசையாக ஒலித்தது. தஞ்சை கீழ வெண்மணி கொடுமை முதல் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் நீச்சல் தெரிந்தும் ஒடுக்குமுறையால் நீரில் மூழ்கடிக்கப்பட்ட அராஜகம் வரை அடுக்கிய ஆவேசப் பாடல்கள் அடக்குமுறைக்கு எதிராகவிழித்தெழுவோம், உயிர்த்தெழு வோம், களத்தில் நிற்போம் என்கிறமொழியில் சாதீய வர்க்க ஒடுக்கு முறைக்கு எதிரான உணர்வுகளை இன்னும் கூர்மைப்படுத்தியது.

மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா கையெ ழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், நகரை அழகுபடுத்துவதாகக் கூறி உழைப்பாளி மக்களை புறநகருக்குத் தள்ளுவதும், ஏழை எளிய மக்களின் குடியிருப்புகளை அராஜகமான முறையில் அகற்றுவதும் கண்டிக்கத்தக்கது என்றார். மேலும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மூலமாக தன்னிச்சையாக வீட்டு வரியை உயர்த்துவது மற்றும் விளையாட்டுத் திடல்களுக்கு அதிக கட்டணம் நிர்ணயித்து ஏழை மாணவர்களின் திறமைகளை முடக்குவது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஆணவப் படுகொலை தடுப்பு சிறப்பு சட்டம் குறித்த விளக்க உரை யாற்றிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, சாதீய வன்மக் கொலைகளைத் தடுத்து நிறுத்த தனிச் சிறப்பு சட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலி யுறுத்தினார். பஞ்சமி நிலங்களைச் சுருட்டிக்கொள்வது குறித்தும், சாதி மறுப்புத்திருமணங்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும் அவர் பேசி னார். இந்நிகழ்வில், தவெக தலைவர் விஜய்அறிவித்துள்ள 'அண்ணன் சீர்' திட்டத்தில், சாதி மறுப்புத் திருமணம் செய்வோருக்குத் தாலிக்கு கூடுதல் கிராமில்தங்கம் வழங்கலாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

புகழ் பெற்ற இசைக் கலை ஞர் கானா பாலா பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். எஸ்.வி.வேணுகோபாலன் ஆணவப் படுகொலை களுக்கு எதிரான கவிதைகளை வாசித்தார். கூடைப்பந்து மற்றும் ஈட்டிஎறிதலில் விருது பெற்ற டாக்டர் வெர்சிகா, விளையாட்டுப் பயிற்சியாளர் கிறிஸ்டி பிலிப், மாநக ராட்சி வெண்டிங் கமிட்டி உறுப்பி னர்கள் சுகுமார், மாலதி, பி.கே.மூர்த்தி, ஏழுமலைமற்றும் கலைக்குழுவினருக்கு மிருதுளா (மாணவர் சங்கம்), நாகராணி (மாதர் சங்கம்), சுந்தரம் (சிஐடியு),ஜி.பாலகிருஷ்ணன் (இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்), எஸ்.வி.வேணுகோபாலன் (தமுஎகச) ஆகியோர் புத்தகப்பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தனர். கங்கு கலைக்குழுவின் பறையாட்டம், பாப் மார்லி இசை வரிகளின் தாக்கம்கொண்ட பாடல்கள் மற்றும் சிறார்களின் சிலம்பாட்டம் நிகழ்வை எழுச்சியடையச் செய்தன.முன்னதாக எழும்பூர் சூளை தட்டான் குளம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, தீண்டாமை ஒழிப்புமுன்னணி மத்திய சென்னை மாவட்டத் தலைவர் கே.முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆபேல் பாபுவரவேற்புரை நிகழ்த்தி னார். எழும்பூர் கிளை செயலாளர் எம்.ஆர்.கோவிந்தன் நன்றி கூறினார்.