தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இணையத்தில் இயங்கும் சாதனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆந்த்ரோபிக் நிறுவனம் எச்சரிக்கை

14 Oct 2026, 9:13 pm
இணையத்தில் இயங்கும் சாதனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆந்த்ரோபிக் நிறுவனம் எச்சரிக்கை

இணையத்தில் இயங்கும் சாதனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகும்

ஆந்த்ரோபிக் நிறுவனம் எச்சரிக்கை

நியூயார்க், அக். 14இணையத்துடன் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் டிவி, குளிரூட்டி போன்ற சாதனங்களில், தாங்களாகவே பிரதியெடுத்துப் (Self-replicate) பரவக்கூடிய திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI)மாதிரிகள் விரைவில் ஊடுருவக்கூடும் என்று ‘ஆந்த்ரோபிக்’ தொழில்நுட்ப நிறுவனம் எச்சரித்துள்ளது. இத்தகைய ஊடுருவல் திறனை அடைவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன என்றும் அது குறிப்பிட்டுள்ளது.ஆந்த்ரோபிக் நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு மாதிரிகளின் திறன் மற்றும் பாதுகாப்பைச் சோதிப்பதற்காகப் பல்வேறு தானியங்கி மதிப்பீட்டுச்சோதனைகளை நடத்தி வருகிறது.

இப்படித்தான் ஏஐ (AI) மாதிரிகள் மனித தலையீடு இன்றி தானாகவே ஒருசாதனத்திலிருந்து மற்றொரு சாதனத்திற்குப் பரவ முடியுமா என்பதையும் அது சோதித்துள்ளது. ஒரே நெட்வொர்க்கில் இணைக்கப்பட்ட 15 மலிவு விலை ஆன்ட்ராய்டு டிவிகளைக் கொண்டு சோதித்ததில், அதிநவீன ஏஐ மாடல்கள் தானாகவேபிரதியெடுத்துப் பரவும் திறனைக் கொண்டிருப்பதை உறுதிசெய்தனர்.

இத்தகைய சுய-பிரதி செயற்கை நுண்ணறிவு மாடல்கள் ‘ஏஐ புழுக்கள்’ (AI Worms) எனக் கூறப்படுகின்றன. இவை ஏதேனும் ஒரு சாதனத்தில் நுழைந்துவிட்டால், அவற்றை அழிப்பது மிகவும் கடினம். ஏனெனில், இவற்றை முடக்குவதற்கு ‘மையக் கட்டுப்பாட்டு மையம்’என்று எதுவுமே இருக்காது என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.ஸ்மார்ட் டிவி, மின்சார அடுப்பு, ரோபோடிக் வேக்யூம் போன்ற சாதனங்கள் குறைந்த பாதுகாப்புத் திறன் மட்டுமே கொண்டுள்ளன. இவற்றில் சுய-பிரதி செயற்கை நுண்ணறிவு பரவினால் “டிஜிட்டல் பூஞ்சை” போல மெதுவாகப் பரவி ஆக்கிரமித்துவிடும். இதனால் பாதுகாப்பு கேமராக்களைக் கூடத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும் என எச்சரித்துள்ளனர்.

வழக்கமான மால்வேர்கள் (Malware) குறிப்பிட்ட சில ஹார்டுவேர் அல்லது சாஃப்ட்வேர்களை மட்டுமே இலக்கு வைக்கும். ஆனால்,இந்தச் சுய-பிரதி செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் தங்களுக்குப் பழக்கமில்லாத புதிய கணினிஅமைப்புகளுக்கும் ஏற்பத் தம்மை மாற்றியமைத்துக்கொண்டு, அடுத்தடுத்த சாதனங்களுக்கும் அந்தத் தகவல்களைப் பரப்பும் திறன் கொண்டவை.இது வீடுகளில் இருக்கும் சாதனங்கள் வழியாக மெதுவாகப் பரவும் “டிஜிட்டல் பூஞ்சை” போன்ற அச்சுறுத்தலில் தொடங்கி, பெரிய தரவு மையங்களைநொடிப்பொழுதில் முடக்கும்அதிநவீன ஏஜென்ட்களாகக்கூட உருவெடுக்கலாம் என்று ஆந்த்ரோபிக் எச்சரித்துள்ளது.

இந்தப் பாதுகாப்புக் குறைபாடுகளானது ஒருஅமைப்பு எளிதில் உளவு பார்க்கப்படும் சூழலை உருவாக்கிவிடும். வீடு தொடங்கி நாட்டின் பாதுகாப்பு வரை அனைத்தும் கேள்விக்குள்ளாகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.