தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டிரம்ப்புக்கு பணிய மறுக்கும் ஆந்த்ரோபிக் நிறுவனர்கள்

6 Mar 2026, 3:17 pm
டிரம்ப்புக்கு பணிய மறுக்கும் ஆந்த்ரோபிக் நிறுவனர்கள்
<p><strong>டிரம்ப்புக்கு பணிய மறுக்கும் ஆந்த்ரோபிக் நிறுவனர்கள்</strong></p> <p>வாஷிங்டன், மார்ச் 6 - அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிபர்கள் அனைவரும் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் பிடிக்குள் வந்துவிட்ட சூழலில், &lsquo;ஆந்த்ரோபிக்&rsquo; (Anthropic) நிறுவனத்தின் நிறுவனர்கள் மட்டும் அவரது அதிரடி உத்தரவுகளுக்குப் பணிய மறுத்து வருவது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. &lsquo;கிளாட்&rsquo; (Claude) என்ற அதிநவீன செயற்கை நுண்ணறிவு அமைப்பை உருவாக்கிய இந்த நிறு வனம், தனது தொழில்நுட்பத்தைப் போர்க் குற்றங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக நிற்கிறது. பில்லியனர்களின் சரணாகதியும் &nbsp;அமோடியின் எதிர்ப்பும் அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ், மெட்டா நிறுவனத்தின் மார்க் &nbsp;ஜுக்கர்பெர்க், கூகுளின் சுந்தர் பிச்சை மற்றும் ஓபன்ஏஐ-ன் சாம் ஆல்ட்மேன் போன்ற உலகின் பெரும் செல்வந்தர்கள் மற்றும் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் அனைவரும் டொனால்டு டிரம்ப்பின் கொள்கைகளுக்கு இணங்கிச் செயல்படத் தொடங்கிவிட்டனர். ஆனால், ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி (Dario Amodei), பென்டகனின் சில நிபந்த னையற்ற கோரிக்கைகளை நிராகரித்து ஜனாதிபதியுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார். குறிப்பாக, அமெரிக்கக் குடிமக்களைப் பெரிய அளவில் உளவு பார்ப்பதற்கோ (Mass surveillance) அல்லது மனிதக் கட்டுப்பாடற்றத் தன்னாட்சி ஆயுதங்களா கவோ (Autonomous weapons) தனது மென்பொருளைப் பயன்படுத்தக் கூடாது என்பதில் அமோடி பிடிவாதமாக உள்ளார். இந்தத் துணிச்சலான முடிவு காரணமாகவே, தற்போது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் (App Store) கிளாட் மென் பொருள் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தடையை மீறித் தொடரும் ராணுவப் பயன்பாடு ஆந்த்ரோபிக் நிறுவனம் டிரம்பின் நிபந்தனைகளை ஏற்க மறுத்ததால், அந்த நிறுவனத்தைக் கருப்புப் பட்டியலில் வைத்த டிரம்ப் நிர்வாகம், அனைத்து அரசு நிறுவனங்களும் ஆறு மாத காலத்திற்குள் கிளாட் மென்பொருள் பயன்பாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது. இருப்பினும், இந்தத் தடை என்பது ஒரு கண்துடைப்பு மட்டுமே என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. ஈரான் மீதான போரில், அமெரிக்க ராணுவம் &lsquo;பாலன்டிர்&rsquo; (Palantir) நிறு வனத்தின் மென்பொருள் வழியாகக் கிளாட் ஏஐ தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. ஈரான் போரின் முதல் நாளிலேயே, 1,000-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தேர்வு செய்ய இந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. &ldquo;எதிரிகளைக் குறி வைப்பதற்காக எந்தத் தொழில்நுட்பத் தடையையும் மீறுவோம்&rdquo; என்று ராணுவ உயர் அதிகாரிகள் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர். ஏஐ படுகொலைகளும் மனிதாபிமானக் கவலைகளும் செயற்கை நுண்ணறிவு மூலம் இலக்கு களைத் தீர்மானிப்பது போர்க்களத்தில் பெரும் உயிர்ச்சேதத்தை விளைவிக்கிறது. கடந்த மார்ச் 1 அன்று தெற்கு ஈரானில் உள்ள பள்ளி மீது நடத்தப்பட்டத் தாக்குத லில் 150 குழந்தைகள் கொல்லப்பட்டது இத்தகைய அல்காரிதங்களின் பிழை யால்தான் எனக் கூறப்படுகிறது. மனிதர் களின் நேரடி மேற்பார்வையின்றி மென் பொருள்கள் இலக்குகளைத் தீர்மானிக்கும் போது, அது போர்க் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது என யுனெஸ்கோ மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் போன்ற அமைப்புகள் எச்சரித்துள்ளன. தொழில்நுட்பப் பணியாளர்களின் எதிர்ப்பு மறுபுறம், சாம் ஆல்ட்மேனின் &lsquo;ஓபன்ஏஐ&rsquo; நிறுவனம் எவ்வித நிபந்தனையு மின்றி பென்டகனுடன் கைகோர்த்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூகுள் மற்றும் ஓபன்ஏஐ நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 900-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் &ldquo;நாம் பிரிக்கப்படமாட்டோம்&rdquo; (We Will Not Be Divided) என்ற பெயரில் பகிரங்கக் கடிதம் எழுதியுள்ளனர். தொழில்நுட்பம் என்பது மனித குலத்தின் மேன்மைக்காகப் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, ஏகாதிபத்தியப் போர்களுக்கு ஆயுதமாக மாறக்கூடாது என்பதே இவர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது. ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் நிறுவனர்கள் காட்டும் இந்த எதிர்ப்பு, வரும் நாட்களில் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்திற்கும் சிலிக்கான் வேலி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இடை யிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.