தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மென்பொருள் வேலைவாய்ப்புகள் விரைவில் அழியக்கூடும் ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடெய் எச்சரிக்கை

21 May 2026, 9:23 pm
மென்பொருள் வேலைவாய்ப்புகள் விரைவில் அழியக்கூடும் ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடெய் எச்சரிக்கை

மென்பொருள் வேலைவாய்ப்புகள் விரைவில் அழியக்கூடும் ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடெய் எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக, நாம் தற்போது அறிந்திருக்கும் வடிவிலான மென் பொருள் வேலைவாய்ப்புகள் மற்றும் பல பத்தாண்டுகளாக இருந்து வரும் தொழில்நுட்பக் கலைச்சொற்கள் விரைவில் இல்லாமல் போக லாம் என்று பிரபல ஏஐ நிறுவனமான ஆந்த்ரோ பிக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடெய் எச்சரித்துள்ளார்.

மென்பொருளின் மதிப்பு பூஜ்ஜியமாகும் சூழல்

இதுதொடர்பாக ஊடகங்களுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில்,”எதிர்காலத்தில் மென்பொருட்களை உருவாக்குவதற்கான செலவு மிகக் கடுமையாகக் குறைந்து, அவை “இலவசம்” என்ற நிலையை எட்டும். ஒரு மென் பொருளை உருவாக்கி, அதற்கான செலவை ஈடுகட்ட லட்சக்கணக்கான வாடிக்கையாளர்க ளைப் பெற வேண்டும் என்ற பாரம்பரிய வர்த்தக விதி இனி செல்லாது. ஏஐ கருவிகள் மிகக் குறு கிய நேரத்தில் துல்லியமாகக் குறியீடுகளை எழுதும் திறன் பெற்று வருவதால், மாதக்கணக்கி லும் கோடிக்கணக்கிலும் செலவு செய்து உரு வாக்கப்பட்ட மென்பொருட்கள், இனி சில மணி நேரங்களிலும் மிகக் குறைந்த செலவிலும் உருவாக்கப்பட்டுவிடும்.

முழுமையான வேலைவாய்ப்பு நெருக்கடி

தற்போது ஏஐ தொழில்நுட்பமானது வெறும் இரண்டு ஆண்டுகளில் ஒரு புத்திசாலியான பள்ளி மாணவர் என்ற நிலையிலிருந்து, கல்லூரி மாணவர் நிலையைத் தாண்டி வளர்ந்துள்ளது. இதன் காரணமாக, மென்பொருள் துறையில் பல பத்தாண்டுகளாக இருந்து வரும் பல வேலைக ளும், ஒட்டுமொத்தத் தொழில் வாழ்க்கையும் எதிர்காலத்தில் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. குறிப்பாக, ஆரம்ப நிலை (Entry- level) மென்பொருள் பொறியாளர்கள், தரவுப் பகுப்பாய்வாளர்கள், நிர்வாகப் பணிகளில் இருப்பவர்கள் இதனால் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள். இந்த மாற்றத்தின் வேகம், தாக்கம் குறித்து இன்னும் பொதுமக்களி டையேயும், சட்டமியற்றுபவர்களிடையேயும் போதிய விழிப்புணர்வு இல்லை.

அரசுகளின் தலையீடு அவசியம்

உலகளாவிய போட்டி காரணமாக ஏஐ தொ ழில்நுட்பத்தின் வளர்ச்சியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் இந்த மாற்றம் தொழிலாளர்களைப் பாதிக்காத வண்ணம் நிறுவ னங்களும் அரசாங்கங்களும் உரியக் கொள்கை களை வகுக்க வேண்டும். ஏஐ நிறுவனங்கள் மீது கூடுதல் வரி விதிப்பது மற்றும் தொழிலாளர்களு க்குப் புதிய தொழில்நுட்பக் கல்வியை வழங்கு வது போன்ற நடவடிக்கைகள் மூலம் மட்டுமே வர விருக்கும் வேலைவாய்ப்பு நெருக்கடியைச் சமாளிக்க முடியும்” என டாரியோ அமோடெய் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். (தி மிண்ட்)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.