மாதர் சங்கம் நடத்திய தொடர் போராட்டம் மதுக்கடையை அகற்றுவதாக உறுதியளிப்பு
21 Jul 2026, 10:44 pm
<p><strong>மாதர் சங்கம் நடத்திய தொடர் போராட்டம் மதுக்கடையை அகற்றுவதாக உறுதியளிப்பு</strong></p><p>ஈரோடு, ஜூலை 21- மாதர் சங்கத்தின் தொடர் போராட்டம் காரணமாக, அந்தியூரில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை அகற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஈரோடு மாவட்டம், அந்தி யூரில், வட்டக்காடு செல்லும் சாலையில் தமிழ்நாடு அரசு வாணிபக்கழகத்தின் சில்லறை மதுபான விற்பனை கடை எண்:3804 அமைந்துள்ளது. இதன் அருகில் மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் உள்ளன. பொதுமக்க ளுக்கு இடையூறாக உள்ள இந்த கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஜூன் 1 ஆம் தேதியன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, ஒரு வார காலத்திற்குள் கடையை மாற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனாலும் தொடர்ந்து செயல்பட்டதால், ஜூன் 9 ஆம் தேதியன்று மாதர் சங்கத்தினர் முற்றுகை யிட்டனர். அப்போது, வருவாய் வட்டாட்சி யர், தமிழ்நாடு வாணிபக்கழக (டாஸ்மாக்) உதவி மேலாளர் ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று, உறுதிய ளிக்கப்பட்டது. ஆயினும், கடை தொடர்ந்து இயங்கியதால், ஜூன் 25 ஆம் தேதியன்று மீண்டும் மதுக்கடையை திறக்கவிடாமல் மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அப்போது, 25 நாட்களுக்குள் மதுக்கடை யினை மாற்றம் செய்வதாக மூன்றாவது முறையாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இந்நிலையில், 25 நாட்கள் கால அவகாசம் முடிவடைந்ததால், மாதர் சங்கத்தினர் செவ் வாயன்று காலை மதுக்கடையினை முற்று கையிட உள்ளதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து, போராட்டக்குழு வினருடன், வருவாய் வட்டாட்சியர் மற்றும் அந்தியூர் காவல் ஆய்வாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதில் பங்கேற்ற தமிழ்நாடு அரசு வாணிபக்கழ கத்தின் கிடங்கு உதவி மேலாளர், மதுபானக் கடை எண்:3804யை இரண்டு நாட்களுக்குள் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படும் என உறுதியளித்தார். அதன்பேரில் நடைபெற விருந்த போராட்டம் கைவிடப்பட்டது. முன்ன தாக, பேச்சுவார்த்தையில், மாதர் சங்க மாவட் டத் தலைவர் எஸ்.கீதா, மாவட்டச் செயலா ளர் ஜெ.அருந்ததி, மாவட்ட துணைத்தலை வர் பி.லலிதா, தாலுகா தலைவர் எம்.மகேஸ் வரி ஆகியோர் பங்கேற்றனர். சிபிஎம் தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன், பொதுத்தொழி லாளர் சங்க நிர்வாகி எஸ்.மயில், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர். விஜயராகவன், தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்டச் செயலாளர் ஏ.கே.பழனிச் சாமி, தாலுகா செயலாளர் எஸ்.செபாஸ்டி யன் ஆகியோர் உடனிருந்தனர்.</p>
