முந்தய பக்கம்

விவசாயத் தொழிலாளர் சங்க அந்தியூர் மாநாடு

24 Sept 2026, 1:45 am
விவசாயத் தொழிலாளர் சங்க அந்தியூர் மாநாடு
<p><strong>விவசாயத் தொழிலாளர் சங்க அந்தியூர் மாநாடு</strong></p><p>ஈரோடு, செப்.23-விவசாயத் தொழிலாளர் சங்க அந்தியூர் தாலுகா மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா 10 ஆவது மாநாடு, புதனன்று அந்தியூரில்நடைபெற்றது. சங்கத்தின் தாலுகா தலைவர் ஜி.செங்கோடன் தலைமை வகித்தார். பி.ராமன் கொடியேற்றினார். மாவட்டப் பொருளாளர் எஸ்.மாணிக்கம் துவக்கவுரையாற்றினார். தாலுகா செயலாளர் ஏ.கே.பழனிசாமி அறிக்கையை முன்வைத்தார். சிபிஎம் தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.வி.மாரிமுத்து ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.இம்மாநாட்டில், கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். அகில இந்திய பாதுகாப்பு சட்டம் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கென்று தனித்துறை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் தாலுகா தலைவராக கே.குருசாமி, செயலாளராக கே.துரையன், பொருளாளராக ஜி.செங்கோடன், துணைத்தலைவராக பி.முருகன், துணைச்செயலாளராக என்.லோகநாதன் உட்பட 20 தாலுகாக்குழு உறுப்பினர்கன் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.ஆர்.விஜயராகவன் நிறைவுரையாற்றினார். ஆர்.மாரியப்பன் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram