தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எச்பிஎன் டெய்ரி-எச்பிஎன் புட்ஸ் பகாசுர நிதி மோசடி மன உளைச்சலில் மேலும் ஒருவர் பலி

11 Feb 2026, 5:52 pm
எச்பிஎன் டெய்ரி-எச்பிஎன் புட்ஸ் பகாசுர நிதி மோசடி மன உளைச்சலில் மேலும் ஒருவர் பலி
<p><strong>எச்பிஎன் டெய்ரி-எச்பிஎன் புட்ஸ் பகாசுர நிதி மோசடி மன உளைச்சலில் மேலும் ஒருவர் பலி</strong></p> <p>மன்னார்குடி, பிப்.10 - திருவாரூர் மாவட்ட கிராமங்களில் வாழ்ந்து வருகிற ஏழை-எளிய மக்கள், குறிப்பாக பெண்கள் &nbsp;தாங்கள் சிறுகச் சிறுக சேமித்து வைத்திருந்த கோடிக்கணக்கான ரூபாய் சேமிப்பு பணத்தை, எச்பிஎன் டெய்ரி-எச்பிஎன் &nbsp;புட்ஸ் என்ற தில்லியை தலைமை இடமாகக் கொண்ட நிறுவனங்கள் சூறையாடி விட்டு தலைமறைவாகி விட்டன. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அநேகர் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்ததாக செய்திகள் வந்தன. இப்போது வாலிபர் வி.ரஜினிகாந்த்தும், மன &nbsp;உளைச்சல் அதிகமாகி பிப்.8 அன்று திடீரென &nbsp;மாரடைப்பு &nbsp;ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த மோசடி பற்றி திருவாரூர் மாவட்ட ஆட்சியாளரிடம் 2.1.2026 அன்று புகார் மனு அளித்தவர் இவர்தான். &nbsp;உயிரிழந்த வி.ரஜினிகாந்த், நீடாமங்கலம் ஒன்றி யம் காளாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் &nbsp;நிதி &nbsp;நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட மக்களை அணி திரட்டி னார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி நகரக் குழு உறுதுணையாக நின்றது. ஊழல் மோசடி விஸ்வரூபம் எடுக்கும் போது, ரஜினி காந்துக்கு மிரட்டல்கள் - நெருக்கடிகள் வந்ததாக செய்திகள் கூறுகின்றன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் கூறியதாவது: திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் ஆயிரத்துக்கு &nbsp;மேற்பட்டோர் இந்த நிறுவனங்களிடம் பணத்தை பறி கொடுத்து விட்டு, செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். &nbsp;கடந்த 2.1.2026 அன்று பாதிக்கப்பட்ட வி.ரஜினிகாந்த் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து முறையிட்டார். &nbsp;அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் &nbsp;செயலாளர் டி.முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.பி.ஜோதிபாசு, சிஐடியு தலைவர் டி.ஜகதீசன் உள்ளிட்டோர் உடனிருந்தோம். காவல்துறையினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேர வேண்டிய நிதியை பெற்றுத் தர வேண்டும். நிதி வசூலில் ஈடுபட்டு மோசடி &nbsp;செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக 28.1.2026 அன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர் களில் பெரும் பகுதியினர் கிராமப்புற ஏழை பெண்கள் தான். &nbsp;ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக போராட்டத்தின் ஆயத்த கூட்டம், மார்க்சிஸ்ட் கட்சியின் மன்னார்குடி நகரக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு நிதி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட பெண்கள் அதிக மாக வந்திருந்தனர். அவர்களிடம் நாங்கள் பேசிய போது, அதிர்ச்சியான பல தகவல்களை அவர்கள் கூறினர். &nbsp;குடும்பச் செலவுகள் போக ஒவ்வொரு மாதமும் சிறுக &nbsp;சிறுக சேமித்து வைத்திருந்த அவர்களது சிறுவாட்டு பணத்தை மாதந்தோறும் ரூ.100, ரூ.200, ரூ.300, ரூ.500 என மோசடியாக வசூல் செய்துள்ளனர். மேலும் &nbsp;இந்நிறுவனத்தில் வைப்பீடு செய்தால் பெருந்தொகை வட்டியாக கிடைக்கும் என்றும், மாதாந்திர சேமிப்புத் தொகை முதிர்வடைந்த பின் அதிக வட்டியுடன் திரண்ட தொகையை திருப்பித் தருகிறோம் என்று ஆசை வார்த் தைகளை கூறியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் மட்டுமில்லாமல் தமிழ்நாட் டின் எல்லா மாவட்டங்களிலும் மிகப்பெரிய நிதி &nbsp;மோசடி &nbsp;செய்து, அப்பாவி மக்களின் சேமிப்பு ஏமாற்றப்பட்டு விட்டது. இவைகள் எல்லாவற்றிற்கும் &nbsp;சென்னையில் உள்ள இந்நிறுவனத்தின் பொது மேலாளர் என்று கூறப்படும் எம்.ஆர்.ரங்கநாதன் &nbsp; மாநில அளவில் மூளையாக செயல்பட்டு உள்ளார். இதற்கான ஆலோச னைகளை, வழிமுறைகளை, நிதி வசூல்களை அந்நிறு வனத்தின் அதிகாரி எனக் கூறப்படும், தஞ்சாவூரில் வசிக்கும் சதாசிவம் &nbsp;என்பவரும், ஆலங்குடியில் வசித்து &nbsp;வரும் ஜெயராமன் என்பவரும் அடிப்படையாக இருந்து உள்ளனர். இது தொடர்பான செய்திகள் தீக்கதிர் நாளித ழில் 29.1.2026 அன்று வெளியாகின. திருவாரூர் மாவட்டத்தில் 2005-இலிருந்து இந்த மோசடி வசூல் அமோகமாக நடைபெற்று உள்ளது. சுமார் &nbsp;ரூ.6 கோடிக்கு மேல் மோசடியாக நிதி திரட்டப்பட்டு மக்கள் &nbsp;ஏமாற்றப்பட்டுள்ளனர். அதன் பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் மனு அளிக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கை &nbsp;எடுத்து ரஜினிகாந்த் உள்ளிட்டோரை சம்மன் அனுப்பி &nbsp;வரவழைத்தனர். ஒட்டுமொத்த நிதி மோசடி வழக்கு விசா ரணை திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரி டம் &nbsp;இருப்பதாகவும், நீங்கள் எல்லோரும் பத்திரங்களு டன் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறினர். பாதிக்கப்பட்டவர்கள் பத்திரங்களுடன் திருச்சி &nbsp;செல்ல வேண்டிய நிலையில், ரஜினிகாந்தின் மரணம் நிகழ்ந்துள்ளது. இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்து, போராட்டங் கள் தீவிரமடைய துவங்கிய நிலையில் இதற்கெல்லாம் காரணமாக இருந்த வி.ரஜினிகாந்த் மீது பலருக்கு கோபம் வந்ததாகவும், அவருக்கு மிரட்டல்-நெருக்கடி கள் மறைமுகமாக கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. &nbsp;ஒருபுறம் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகள், மறுபுறம் ஏமாற்று பேர்வழிகளின் நெருக்கடிகள் இவை களின் நடுவே மன உளைச்சலில் இருந்த இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் அந்த கிராம மக்கள் தெரிவித்தனர். ஏமாற்றப்பட்ட அப்பாவி மக்கள் இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த மக்களுக்கு நீதியும் பணமும் திரும்ப கிடைக்க வேண்டும். மரணமடைந்த ரஜினிகாந்த் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மரணமடைந்த வாலிபர் ரஜினிகாந்தின் இறுதி நிகழ்ச்சியில் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ஜி.ரகுராமன், கே.பி.ஜோதிபாசு, நகரக் குழு உறுப்பினர் ஜி. தாயுமானவன், விவசாயிகள் சங்க நகரச் செயலாளர் ஜி.முத்துக்கிருஷ்ணன், சிஐடியு தலைவர் டி.ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.