கிட்னி விற்பனை விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது
15 Nov 2025, 4:09 pm
<p><strong>கிட்னி விற்பனை விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது</strong></p>
<p>நாமக்கல், நவ.15- பள்ளிபாளையத்தில் கிட்னி விற்பனை இடைத்தரகர்களிடம் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத் தில் விசைத்தறித் தொழிலாளர்களின் வறு மையை பயன்படுத்தி தனியார் மருத்துவ மனைகளுக்கு கிட்னி விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. அதனடிப்படையில், பள்ளி பாளையத்தைச் சேர்ந்த இடைத்தரகர்க ளான ஆனந்த், ஸ்டான்லி மோகன் ஆகிய இருவரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்திருந்தனர். கடந்த ஐந்து நாட்க ளுக்கு முன்பு குமாரபாளையம் நீதிமன்றத் தின் ஒப்புதலோடு பள்ளிபாளையம் திருச் செங்கோடு சாலையில் உள்ள பயணியர் மாளிகையில் காவலில் எடுத்து விசாரணை நடைபெற்று வந்தது. இதில் அவர்கள் பல தகவல்களை கூறியுள்ளதாக தெரிகிறது. மேலும், வெள்ளியன்று மாலையுடன் விசா ரணை நிறைவுற்ற நிலையில், ஆனந்த் மற்றும் ஸ்டான்லி மோகன் அளித்த தகவ லின் அடிப்படையில், கிட்னி விற்பனையில் உடந்தையாக செயல்பட்ட அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த முத்து என்பவரை சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் கைது செய்தனர். மூவரையும் குமாரபாளையம் நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி மீண்டும் அவர்களை சேலம் சிறையில் அடைத்தனர். விசாரணை குறித்த முடிவுகள் நீதிமன்றத்தில் தெரி விக்கப்படும் என சிறப்பு புலனாய்வு போலீ சார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய முத்து தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங் களுக்கும் கிட்னி விற்பனைக்காக தொழிலா ளர்களை அழைத்துச் சென்றுள்ளதாக கூறப் படுகிறது. எனவே, முத்துவை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் திட்டமிட்டுள்ள நிலையில், கிட்னி விவகாரத்தில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இதேபோல சிறப்பு புலனாய்வுக் குழு போலீ சாரின் விசாரணையில் பலரும் அடுத்தடுத்து கைதாகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகி றது.</p>
