தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மின்வேலியில் சிக்கி மீண்டும் ஒரு யானை உயிரிழப்பு

7 Dec 2025, 3:52 pm
மின்வேலியில் சிக்கி மீண்டும் ஒரு யானை உயிரிழப்பு
<p><strong>மின்வேலியில் சிக்கி மீண்டும் ஒரு யானை உயிரிழப்பு</strong></p> <p>ஈரோடு, டிச.7- சத்தியமங்கலம் அருகே &nbsp;மின்வேலியில் சிக்கி யானை &nbsp;உயிரிழந்த சம்பவம் தொடர் பாக ஒருவரை வனத்துறையி னர் கைது செய்து விசாரணை &nbsp;மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான &nbsp;யானைகள் உள்ளன. வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் &nbsp;நுழையும் யானைகள், விவசாயிகள் பயி ரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை தொடர்ச்சியாக சேதப் படுத்தி வருகின்றன. இந்நிலையில், சத்திய மங்கலம் அருகே உள்ள பெரும்பள்ளம் அணையையொட்டி உள்ள வனப்பகுதி யிலிருந்து சனியன்று வெளியேறிய யானை ஒன்று, அருகிலுள்ள சோளம் பயிரிட்டிருந்த தோட்டத்துக்குள் நுழைய முயன்றது. அப் போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கியதில் மின்சாரம் பாய்ந்து &nbsp;யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. &nbsp;இதுகுறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த &nbsp;தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தும் &nbsp;அப்பகுதியைச் சேர்ந்த பெரிய முத்தான் (75) &nbsp;என்பவர், சட்டவிரோதமாக கம்பி வேலி &nbsp;அமைத்து அதில் மின்சாரம் பாய்ச்சியது தெரி யவந்தது. இதையடுத்து வனத்துறையினர் அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு &nbsp;வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து உயிரிழந் தது சுமார் 15 வயது உடைய பெண் யானை &nbsp;என்றும், கால்நடை மருத்துவரை வர வழைத்து யானையின் உடல் கூறாய்வு செய் யப்படும் எனவும் வனத்துறையினர் தெரி வித்தனர். இதனிடையே, கடந்த நவ.3 ஆம் தேதியன்று இரவு பர்கூர் மலைப்பகுதியில் மின்வேலியில் சிக்கி யானை ஒன்று உயி ரிழந்தது. தற்போது ஒரு வார கால &nbsp;இடைவெளியில் மீண்டும் ஒரு யானை &nbsp;உயிரிழந்த சம்பவம் வன உயிரின ஆர்வலர்க ளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.