தாலுகா அதிகாரிகள் அலட்சியம் விவசாயி வெளியிட்ட வீடியோ வைரல்!
5 Jun 2026, 10:11 pm
<p>அன்னூர், ஜூன் 5- </p><p>அன்னூர் வட்டாட்சியர் (தாலுகா) அலுவலகத் தில் பணியாற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய நேரத்திற்கு பணிக்கு வராமல் பொதுமக் களை அலைக்கழிப்பதாக விவசாயி ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. கோவை மாவட்டம், அன்னூர் பகுதியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி என்ற விவசாயி, தனது நில அளவை சம்பந்தப்பட்ட பிரச்சைனைகளுக்காக அன்னூர் வட் டாட்சியர் அலுவலகத்தில் உள்ள நில அளவைப் பிரி விற்குச் சென்றுள்ளார். அப்போது, காலை 10.30 மணி கடந்தும் ஒரேயொரு அதிகாரியைத் தவிர மற்ற அதி காரிகள் யாரும் பணிக்கு வரவில்லை. பொதுமக்கள் பலர் தங்களது பல்வேறு தேவைகளுக்காகக் காலை முதலே வந்து காத்திருந்த நிலையிலும், இருக்கை கள் அனைத்தும் காலியாகவே கிடந்துள்ளன. இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ள விவசாயி வெள்ளியங்கிரி, அன்னூர் தாலுகா அலுவலகத் தில் தினமும் இதே நிலைதான் நீடிக்கிறது. அதிகாரி கள் யாரும் உரிய நேரத்திற்கு வருவதில்லை. காலை 11 மணிக்கு மேல் தான் தங்களது இருக்கைக ளுக்கே வருகிறார்கள். இதனால் பல்வேறு பணி களை போட்டுவிட்டு வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நாள் கணக்கில் அலைக்கழிக்கப் பட்டு, கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் என குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
