களத்தூர் அரசுப் பள்ளியில் ஆண்டு விழா
23 Feb 2026, 5:35 pm
<p><strong>களத்தூர் அரசுப் பள்ளியில் ஆண்டு விழா</strong></p>
<p>தஞ்சாவூர், பிப்.23- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம், களத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பழனிவேல் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் கோ.சுகன்யா, துணைத் தலைவர் தேவி, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் ராஜஸ்ரீ ஆண்டறிக்கை வாசித்தார். அட்மா தலைவர் அன்பழகன், அட்மா உறுப்பினர் இளங்கோவன், சோகோ நிறுவன மென்பொருள் பொறியாளர் சசிக்குமார், ஆசிரியர் பயிற்றுனர் அ.ரா. சரவணன் ஆகியோர் பரிசுகள் வழங்கி வாழ்த்திப் பேசினர். லட்சியக் கவிஞர் சிங்காரவேலு இலக்கிய உரை ஆற்றினார். பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இலக்கிய மன்றம், வானவில் மன்றம், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. முன்னதாக பட்டதாரி ஆசிரியர் கவிதா வரவேற்றார். பள்ளி பட்டதாரி ஆசிரியை மணிமேகலை நன்றி கூறினார்.</p>
