முந்தய பக்கம்

அரசு கலை கல்லூரியில் ஆண்டு விழா

31 Mar 2026, 4:50 pm
அரசு கலை கல்லூரியில் ஆண்டு விழா
<p><strong>அரசு கலை கல்லூரியில் ஆண்டு விழா&nbsp;</strong></p> <p>தஞ்சாவூர், மார்ச் 31- &nbsp;தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராணி தலைமையில் நடைபெற்றது. &nbsp;இவ்விழாவில் அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் செய்யது அகமது கபீர் உரையாற்றினார். கல்லூரி முன்னாள் முதல்வர் திருமலைச்சாமி முன்னிலை வகித்து, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி வாழ்த்திப் பேசினார். &nbsp;முன்னதாக, வணிகவியல் துறைத் தலைவர் பழனிவேல் வரவேற்க, வணிக நிர்வாகவியல் துறை துணைத் தலைவர் ஜெயக்குமார் நன்றி கூறினார். இந்நிகழ்வில் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram