முந்தய பக்கம்

அசோகா சிசுவிகார் மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விழா

22 Feb 2026, 3:26 pm
அசோகா சிசுவிகார் மெட்ரிக்  பள்ளியில் ஆண்டு விழா
<p><strong>அசோகா சிசுவிகார் மெட்ரிக் &nbsp;பள்ளியில் ஆண்டு விழா</strong></p> <p>மன்னார்குடி, பிப்.22- &nbsp;திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அசோகா சிசுவிகார் மெட்ரிக்குலேசன் பள்ளியின் 41 ஆவது &nbsp;ஆண்டு விழா, பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்றது. &nbsp;விழாவிற்கு பள்ளியின் தாளாளரும் ஏ.எஸ்.வி. கல்வி அறக்கட்டளையின் &nbsp;ஸ்தாபகருமான எம்.ஜி. வெங்கட்டராஜன் தலைமை வகித்தார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் துவங்கின. பள்ளியின் தலைமை ஆசிரியை வி. சுந்தரி வரவேற்றார். பள்ளியின் &nbsp;நிர்வாக அலுவலர் மல்லிகா வெங்கடராஜன் &nbsp;ஆண்டறிக்கையை முன் வைத்து உரையாற்றினார். பள்ளியின் தாளாளர் எம்.ஜி. வெங்கட்டராஜன், மாவட்ட கல்வி அலுவலர் டி. ராஜேஸ்வரியை அறிமுகம் செய்து நினைவு பரிசினை வழங்கினார். &nbsp;நிர்வாக அலுவலர் மல்லிகா வெங்கட்டராஜன் சால்வை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட கல்வி அலுவலர் டி. ராஜேஸ்வரி, கடந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற கே. பாவேஷ் என்ற மாணவருக்கு தங்கப் பதக்கமும், சான்றிதழும், அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற எஸ்.ஆர். சங்கமித்ரா என்ற மாணவிக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கி உரையாற்றினார். &nbsp;மாவட்ட, மண்டல அளவிலான தடகள மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு, பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பின்னர் மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம் உள்ளிட்ட வீர விளையாட்டுக்கள் நடைபெற்றன ஜி. நித்திய பிரபா நன்றி கூறினார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram