தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி 4 கட்டப் போராட்ட இயக்கம் அறிவிப்பு

9 Nov 2025, 2:37 pm
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி 4 கட்டப் போராட்ட இயக்கம் அறிவிப்பு
<p><strong>அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி 4 கட்டப் போராட்ட இயக்கம் அறிவிப்பு</strong></p> <p>திருப்பூர், நவ.9 - &nbsp;தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் &nbsp;பிரதிநிதித்துவப் பேரவைக் கூட்டத்தில், மாநில அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்ற வலியுறுத்தி, நவம்பர் 18 அன்று ஒரு நாள் &nbsp;அடையாள வேலை நிறுத்தம் உட்பட நான்கு கட்டப் &nbsp;போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. &nbsp;தேர்தல் வாக்குறுதிகளை வலியுறுத்தி போராட்டம் &nbsp;திருப்பூரில் நவம்பர் 8 (சனிக்கிழமை) அன்று &nbsp;நடைபெற்ற மாநிலப் பிரதிநிதித்துவப் பேரவை யில் நிறைவேற்றப்பட்ட அறைகூவல் தீர்மானத் தில், 2021 தேர்தலில் திமுக அரசு, அரசு ஊழி யர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்திருந்தது (வாக்குறுதி பட்டியல் வரிசை எண் 308 முதல் 318 வரை). ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டு காலத்திலும் அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றாததோடு, அத்துக்கூலி முறைகளை அரசுத் துறைகளில் நடைமுறைப்படுத்தி வருகிறது என்றும் கண்டிக் கப்பட்டுள்ளது. &nbsp;நான்கு கட்டப் போராட்ட இயக்கம் நிலுவைக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அறிவிக்கப்பட்டுள்ள போராட்ட இயக் கங்கள் பின்வருமாறு: &nbsp;* நவம்பர் 18: ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் சார்பில் அனைத்து அரசு ஊழியர்களும் பங்கேற் கும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம். &nbsp;* நவம்பர் 24 முதல் 28 வரை: பழைய ஓய்வூதி யத் திட்டத்தை (OPS) உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஜீப் பிரச்சார இயக்கம். &nbsp;*டிசம்பர் 4: அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் மறியல் போராட்டம் நடத்துதல். &nbsp;* 2026 ஜனவரி முதல் வாரம்: கோரிக்கைகள் நிறைவேறும் வரை, அனைத்துத் துறை அரசு ஊழியர்களும் ஒன்று திரண்டு காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்துவது. &nbsp;ஒன்றுபட்டு போராட அழைப்பு பிரதிநிதித்துவ பேரவையின் நிறைவாக நடை பெற்ற பொது மாநாட்டில் சிஐடியு அகில இந்திய &nbsp;துணைத் தலைவர் ஏ.கே. பத்மநாபன் சிறப்புரை யாற்றினார். அப்போது அவர், அரசு ஊழியர்க ளின் வாழ்வாதாரக் கோரிக்கைகள், அரசின் தாரா ளமயக் கொள்கைகளோடு இணைந்தது என்ப தைப் புரிந்துகொண்டு அனைவரும் ஒன்றுபட்டுப் &nbsp;போராட வேண்டும் என்று வலியுறுத்தினார். &nbsp;2003 ஆம் ஆண்டு புதிய ஓய்வூதியத் திட்டம் &nbsp;(NPS) அமலாக்கப்பட்ட போது, இடதுசாரி கட்சி உறுப்பினர்கள் மட்டும்தான் அதை எதிர்த்த தாகவும், இடதுசாரிகள் ஆட்சி நடத்திய மூன்று மாநிலங்களில் மட்டுமே அத்திட்டத்தை ஏற்க மாட்டோம் என்று உறுதியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். &nbsp;ஒன்றிய அரசின் பல கொள்கைகளை திமுக &nbsp;அரசு எதிர்ப்பதை வரவேற்பதாகக் கூறிய அவர், &ldquo;அதே சமயம் தொழிலாளர், ஊழியர்கள் பிரச்சனை என்று வரும் பொழுது ஒன்றிய அரசின் &nbsp;திட்டங்களை வேறு பெயர்களில் அமலாக்குவது என்ன நியாயம்?&rdquo; என்று கேள்வி எழுப்பினார். &nbsp;ஓய்வூதியம், ஒப்பந்த முறை, தொகுப்பூதியம் என எல்லாவற்றிலும் அரசின் கொள்கைகளை ஒவ்வொரு பிரிவு தொழிலாளியும் இணைத்துப் பார்க்க வேண்டும். ஏனெனில், இது அரசு ஊழி யர்களுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இருக்கும் ஒட்டுமொத்த உழைப்பாளி மக்கள் நிலையும் மாற்றப்பட்டு விட்டது என்றார். &nbsp;ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள ஷிரம் &nbsp;சக்தி நீதி என்ற புதிய தொழிலாளர் கொள்கை, மனுஸ்மிருதி கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் கண்டனம் தெரிவித் தார். இனி தொழிலாளி என்பவர் சட்ட உரி மைகள் பெற்றவர் என்பதல்ல, மாறாகத் தனி யார் முதலாளிகள் வேலை தரக்கூடியவர்கள் என்ற அடிப்படையில் தொழிலாளர்கள் அவர் களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற கொள் கையை மோடி அரசு வகுத்துள்ளதாகக் கூறி னார். &nbsp;அரசின் கார்ப்பரேட் கொள்கை காப்பீட்டு ஊழியர் சங்க முன்னாள் தென் மண்டல பொதுச் செயலாளர் க.சுவாமிநாதன் நிறைவுரையாற்றினார். அவர், ஆட்சியாளர்கள் பின்பற்றும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையால் திருப்பூரின் சிறு தொழில்கள் பாதிக்கப்படுவதற்கும், அரசு ஊழியர்களின் பழைய பென்சன் திட்டம் கைவிடப்பட்டதற்கும் இடையே தொடர்பு உள்ளது என்று சுட்டிக் காட்டினார். &nbsp;பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக ஆட்சியா ளர்கள் அமலாக்கும் கொள்கைகள், பங்குச் &nbsp;சந்தை சூதாட்டத்திற்காக நடுத்தர மக்களின் சேமிப்பை, குறிப்பாக பென்ஷன் நிதியைப் பயன் படுத்துகின்றன என்று குற்றம் சாட்டினார். கார்ப்பரேட் வரியை 33%லிருந்து 22% ஆகக் &nbsp;குறைத்து, மக்களுக்கு வரவேண்டிய லட்சக்கணக் கான கோடி ரூபாய் வரிப்பணத்தை தள்ளுபடி செய்வதன் மூலமே ஆடம்பரச் செலவுகள் நிகழ் கின்றன என்று அம்பலப்படுத்தினார். எனவே, &ldquo;அரசு ஊழியர்களும், எளிய மக்களும் சேர்ந்து கரம் உயர்த்த வேண்டிய தருணம் இது,&rdquo; என்று அறைகூவல் விடுத்தார். &nbsp;சங்கத்தின் புதிய பொதுச் செயலாளர் தேர்வு முன்னதாக மாநிலப் பிரதிநிதித்துவப் பேரவையில், பொதுச் செயலாளராக இருந்த மு. சீனிவாசன் தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவி &nbsp;விலகியதைத் தொடர்ந்து, துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான வெ.சோமசுந்தரம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் புதிய &nbsp;மாநிலப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அத்துடன், முகமது உசேன் துணைப் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.