சைனிக் பள்ளியில் ஆண்டு விழா
18 Jan 2026, 4:50 pm
<p><strong>சைனிக் பள்ளியில் ஆண்டு விழா</strong></p>
<p>உடுமலை, ஜன.18- உடுமலை அருகே உள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளியின் 64 ஆவது ஆண்டு விழா சனியன்று கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி நகரில் சைனிக் பள்ளி செயப்பட்டு வருகி றது. இப்பள்ளியின் 64 ஆவது ஆண்டு விழா சனி யன்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தலைமை விருந் தினராகக் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மூன்று புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இதைத்தொடர்ந்து, இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் வளமான கலாச்சா ரத்தை உள்ளடக்கிய பல்வேறு வகையான பொழுது போக்கு நிகழ்ச்சிகளுடன் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. இதைத்தொடர்ந்து, 2025–26 கல்வியாண்டிற் கான வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், திருப்பூர் மாவட்டக் கல்வி அதிகாரி காளிமுத்து, பள்ளியின் நிர்வாக அதி காரி லெப்டினன்ட் கர்னல் கே.தீபு, துணை முதல்வர் லெப்டினன்ட் கர்னல் கௌஷக் நந்தினி, உடுமலைப் பேட்டை கேந்திரிய வித்யாலயா முதல்வர் வளர்மதி, கோவை பொதுப்பணித் துறை (PWD) மேற்பார்வை பொறியாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
